சீனாவின் விஷமத்தனம்: மத்திய அரசு கண்டனம்
புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா பெயர் மாற்றம் செய்ததற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா அவ்வப்போது சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2020ல், லடாக்கை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கு அருகே அத்துமீறிய சீன வீரர்கள் மீது இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் எழுந்தது. பல கட்ட பேச்சைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளுக்கு, தனிச்சையாக வேறு பெயர்களை சீனா சூட்டியுள்ளது.
இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
நமக்கு சொந்தமான அருணாச்சலின் சில பகுதிகளுக்கு சீனா போலியான பெயர்களை சூட்டியுள்ளது. இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம்.
அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சீனாவின் மலிவான முயற்சிகளால் இந்திய எல்லைகளை மாற்ற முடியாது.
சீனாவின் இந்த செயல் இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை சீர்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
இரு தரப்பு உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாம் சீன பகுதிகளை பெயர் மாற்றம் செய்யவேண்டும்
பதிலுக்கு நீங்க சீனப்பகுதிகளை சொந்தம் கொண்டாடுங்க ..... தைவான் எப்பவுமே ஒரு சுதந்திர நாடுன்னு சொல்லுங்க .... எல்லைப்புற சீன மாகாணங்களின் குடிமக்களுக்கு வித்தியாசமான விசா குடுங்க ......
இப்போ என்ன ஆச்சு நீங்களும் எல்லையோர சில சீனா பகுதிகளுக்கு நமது பாரத பெயர்களை சூட்டிடுங்கள் அப்போதான் சீனாவோட விஷமத்தனம் அடங்கும் இதெல்லாம் சொல்லியா தெரியணும் இல்லையென்றால் சீனாவே இந்தியாவோட பகுதி என்றும் சொல்லுங்கள் இப்போ அமெரிக்க அதிபர் என்ன சொல்கிறார் தெரியுமா ஒருநாளைக்கு கனடா அமெரிக்காவின் 51 - வது மாநிலம் என்கிறார் அடுத்து கிரீன்லேண்டு அமெரிக்காவுடையது என்கிறார் வெனின்சுலா நாடு அமரிக்காவை சேர்ந்தது என்கிறார் இவைக்கெல்லாமே அரசியல் சூதாட்டங்கள் கோமாளிகள் கூத்தாட்டங்கள் அப்போ அப்போ வெளிவர பிறகு அடங்கிவிடும் இவைகளைக்கண்டு மக்களோ அந்தந்த நாடுகளோ அல்லது மற்ற நாடுகளோ கண்டுகொள்வதில்லை பைத்தியம் என்று ஒதுக்கித்தள்ளிவிட்டு போகின்றனர்.
சீன ஆக்கிரமிப்புப்பகுதிகளுக்கு இந்தியா தனது விருப்பம் போல பெயரிட்டு அங்கிருந்து வருபவர்களுக்கு விசா இல்லாமல் இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் செய்யும் அதே குசும்பை செய்தால் புரிந்து கொள்வார்கள்.மேலும்
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்