இந்திய பத்திர சந்தைக்கு 'செக்' வைக்கும் பணவீக்கம்
ச ர்வதேச பணவீக்க அச்சம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய பத்திர சந்தை தற்போதைக்கு அழுத்தமான சூழலையே சந்திக்கும் என, 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை தாண்டியுள்ளதால், உலகளாவிய பணவீக்கம் அதிகரித்துள்ளது
அமெரிக்காவின் 10 ஆண்டு கால பத்திரங்களுக்கான வட்டி 4.45 - 4.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜப்பானிலும் பல பத்தாண்டுகளில் இல்லாத உயர்வு காணப்படுகிறது. இது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது
பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ஆர்.பி.ஐ., தனது 'ரெப்போ' வட்டி விகிதத்தை 5.25 சதவீதம் என்ற அளவில் மாற்றமில்லாமல் வைத்துள்ளது
* இந்தியாவின் 10 ஆண்டு கால அரசுப் பத்திரங்களின் வட்டி 7.14 சதவீதமாக அதிகரித்துள்ளது
* வங்கிகள் தங்களின் 'முதலீட்டு ஏற்ற இறக்க இருப்பு' நிதியை இனி தங்களின் முக்கிய மூலதனமாக மாற்றிக் கொள்ள ஆர்.பி.ஐ., அனுமதித்துள்ளது. இது வங்கிகளின் நிதி நிலையை வலுப்படுத்த உதவும்
சந்தையில் அவ்வப்போது சிறிய முன்னேற்றங்கள் தெரிந்தாலும், அவை தற்காலிகமானவையே. பணவீக்கம் மற்றும் உலகளாவிய சூழலில் தெளிவு பிறக்கும் வரை, பத்திர முதலீடுகளில் எச்சரிக்கையான போக்கே நீடிக்கும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை