பங்குகளிலிருந்து பத்திரங்களுக்கு மாறிய தனியார் நிறுவனங்களின் முதலீடுகள்
க டந்த 2024 - 25 நிதியாண்டில், தனியார் துறை நிறுவனங்கள், கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
ஆர்.பி.ஐ., மேலும் தெரிவித்திருப்பதாவது:
“நிதித்துறை சாராத 15,919 தனியார் நிறுவனங்களின் தரவுகளை ஆய்வு செய்ததில், அவற்றின் கடன்பத்திர முதலீடு 2024-25ம் நிதி ஆண்டில் 35,981 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் வெறும் 224 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.
நிறுவனங்களின் கடன் பத்திர வெளியீடுகள், 2023 - 24ம் நிதி ஆண்டின் 8.38 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 2024-25ல் 9.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த முதலீட்டு பத்திரங்களுக்கான வட்டி 6.5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கிடைத்துள்ளது.
சரிந்த பங்கு முதலீடு கடன்பத்திரங்களில் முதலீடு அதிகரித்த அதே நேரத்தில், தனியார் நிறுவனங்களின் பங்கு முதலீடு 62.25 சதவீதம் சரிந்து, 59,945 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இது 1.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மியூச்சுவல் பண்டு முதலீடும் 6,700 கோடி ரூபாயிலிருந்து 3,656 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை