டூவீலர் மீது லாரி மோதி இரு விவசாயிகள் பலி
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பைபாஸ் சந்திப்பில் டூவீலர் மீது லாரி மோதியதில் விவசாயிகள் இருவர் பலியாயினர்.
கம்பம் சுருளிப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் ஜெகன் 30, சுஜித்குமார் 32. இவர்கள் நேற்று மதியம் டூவீலரில் கம்பத்தில் இருந்து உத்தமபாளையம் சென்றனர். கம்பம் பைபாஸ் சந்திப்பில் சென்ற போது தேனியில் இருந்து கூடலுாருக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெகன் சம்பவ இடத்திலேயே பலியானார். சுஜித்குமார் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். விபத்திற்கு பின் லாரி டிரைவர் முருகானந்தத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருந்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement