ரூ.340 கோடிக்கு ஏற்றுமதி ஆர்டர் பெற்ற பி.இ.எம்.எல்.,
பெங்களூரு, ஏப். 14--
மத்திய பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல்., என்ற பாரத் எர்த் மூவர்ஸ், கட்டுமான இயந்திரங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வினியோகம் செய்ய, 340 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி ஆர்டர் பெற்றுள்ளது.
இந்நிறுவனம் முதல் முறையாக மத்திய கிழக்கு சந்தைக்குள் நுழைகிறது. அங்கு போர் நடந்து வரும் நிலையில், மறுகட்டமைப்பு மற்றும் இதர உள்கட்டமைப்பு தேவைகளுக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், விற்பனை மட்டுமின்றி, அதற்கான இயந்திர பராமரிப்பு, உதிரிபாகங்கள் மற்றும் இதர சேவைகளை வழங்குகிறது.
முன்னதாக, 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆப்ரிக்க நாடுகளிடம் இருந்து ஆர்டர் பெற்று இருந்த இந்நிறுவனம், மொத்தமாக 890 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆர்டர் வைத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
Advertisement
Advertisement