ஏற்றுமதியில் 'கிரீன் திருப்பூர்' அதிக பங்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டால் சாத்தியமானது
திருப்பூர்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக, 'மேட் இன் இந்தியா' பொருட்கள் உற்பத்தி மேம்படுத்தப்படும் என, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் உறுதி அளித்துள்ளதாக பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி வர்த்தகத்திலும், 'கிரீன் திருப்பூர்' உற்பத்தி பொருட்கள் அதிக பங்கு வகிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்தில் திருப்பூர் வந்த மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல், தொழில்துறையினருடன் கலந்தாய்வு நடத்தினார். 'திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது; நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு, பின்னலாடை ஏற்றுமதி முக்கிய பங்காற்றுகிறது.
அமெரிக்க வரி விதிப்பு பிரச்னை, மேற்காசிய போர் என, எத்தகைய பிரச்னை வந்தாலும், தைரியமாக எதிர்கொண்டு வர்த்தகம் செய்வதில் திருப்பூர் முன்னோடி நகரமாக உயர்ந்துள்ளது' என அவர் பாராட்டியதாக திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்தனர்.
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மேலும் கூறியதாவது:
இந்தியா, 38 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது; படிப்படியாக, ஒவ்வொரு ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரும்; வர்த்தக ஒப்பந்தங்களால், 'பூஜ்ஜிய' இறக்குமதி வரியுடன், ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடியும். அனைத்து ஒப்பந்தங்களையும் சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
உலக நாடுகள், இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புவதாகவும் கோயல் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில், 'கிரீன்' என்ற தரத்துடன் பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன; ஏற்றுமதி வர்த்தகத்திலும், 'கிரீன் திருப்பூர்' உற்பத்தி பொருட்கள் அதிக பங்கு வகிக்கின்றன.
இனிவரும் காலங்களில், 'கிரீன் எனர்ஜி' எனப்படும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக, 'மேட் இன் இந்தியா' பொருட்கள் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
'கிரீன்' என்ற தரத்துடன் பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன
'கிரீன் எனர்ஜி' வாயிலாக, 'மேட் இன் இந்தியா' பொருட்கள் உற்பத்தி மேம்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
Advertisement
Advertisement