பழனிசாமியை எளிதில் அணுக முடியும்!
அஸ்வதி, 25
தனியார் நிறுவன ஊழியர், பொள்ளாச்சி
ஒரு பெண்ணாக இருந்து, பிரச்னைகளை கண்டு ஒதுங்காம, அத்தனையையும் சமாளித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க துணிச்சல், தன்னம்பிக்கை எல்லாமே பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருந்தது. அவங்கள பாத்து எனக்குள் தைரியத்தை வளர்த்துக்கிட்டேன்.
மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை வளர்ந்த மாநிலமாக மாற்ற முயற்சி எடுத்தாங்க. அவங்க, பெண்களுக்கு ரோல் மாடலா இருந்தாங்க. இது எல்லாமே என்னை கவர்ந்ததால் தான் அவங்களுக்கு ஓட்டு போட்டேன்.
அதன்பின் முதல்வர் பழனிசாமியும், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். அவரை மக்கள் எளிதில் அணுக முடிந்தது. அதனால், தொடர்ந்து அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு அளித்தேன்.
பொள்ளாச்சிக்கு அரசு கல்லுாரி, மருத்துவமனை விரிவாக்கம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மழைநீரை சேமிக்க தடுப்பணைகள் என பல திட்டங்கள் கொண்டு வந்தாங்க. இந்த முறையும் அ.தி.மு.க.,வுக்கே ஓட்டு போடுவேன்.
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்