மதுக்கரையில் போலீசார் கொடி அணிவகுப்பு

போத்தனூர்: சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. இதையடுத்து நேற்று மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மதுக்கரை மார்க்கெட் சாலை - நாச்சிபாளையம் சாலை சந்திப்பு பகு தியில் துவங்கி, குரும்பபாளையம் பிரிவு வரை, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோரது தலைமையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுத்து வந்தனர்.

இதில், சட்டம் - ஒழுங்கு, ஆயுதப்படை, சிறப்பு படை, ஊர்க்காவல் படை, கேரள மாநில சிறப்பு போலீசார் என, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement