கானாங்காட்டில் சுத்திகரித்த குடிநீர் வசந்தம் கார்த்திகேயன் உறுதி

மூங்கில்துறைப்பட்டு: கானாங்காடு கிராமத்தில் சுத்திகரிப்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் உறுதி அளித்தார்.

ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், மூங்கில்துறைப்பட்டு அடுத்த தொழுவந்தாங்கல் கானாங்காடு, புதுார், பாக்கம், கடுவனுார் மற்றும் ஓடியந்தல் ஆகிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில்; கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் சாலை வசதி, கல்வெட்டுகள், கழிவு நீர் கால்வாய் வசதி அனைத்து பகுதிகளிலும் தடையில்லா குடிநீர் குழாய்கள், அங்கன்வாடி கட்டடங்கள், வகுப்பறை, சுகாதார நிலைய கட்டடங்கள் என மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து முடித்துள்ளேன்.

கானாங்காடு கிராமத்தில் குடிநீரால் பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் சுத்திகரித்த குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.

ஓட்டு சேகரிப்பில், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் துரைமுருகன், ஊராட்சி தலைவர்கள் கீதா சுகுமார், தேவகி மனோகர், ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement