திருக்கோவிலுார் தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொடர தி.மு.க.,விற்கு ஆதரவளியுங்கள் வேட்பாளர் கவுதம சிகாமணி வேண்டுகோள்
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் தொகுதியின் வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் தனது தந்தை பொன்முடி செய்த சாதனைகள் ஏராளம் என பட்டியலிட்டு தி.மு.க., வேட்பாளர் கவுதம சிகாமணி கூறியதாவது;
திருக்கோவிலுார் தொகுதியில் எனது தந்தை பொன்முடி 2 முறை வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பல வளர்ச்சி பணி திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
கல்வி முக்கியம் என உணர்ந்து தொகுதியில் திருவெண்ணைநல்லுார், திருக்கோவிலுாரில் அரசு கலைக்கல்லுாரி கொண்டு வந்தார்.
அரகண்டநல்லுாரில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு போட்டி தேர்வில் மாணவர்களின் தனி திறனை மேம்படுத்தி கொள்ள திருக்கோவிலுார் நகராட்சியில் 3 கோடி மதிப்பில் கலைஞர் அறிவு சார் மையம் கட்டப்பட்டுள்ளது.
சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருக்கோவிலுாரில் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 54 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வரவுள்ளது. சந்தப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலுாரில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.3.5 கோடி மதிப்பில் நகராட்சி அலுவலகம், ரூ. 3 கோடி மதிப்பில் புதிய ஆர்.டி.ஓ., அலுவலகம், ரூ. 3 கோடி மதிப்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையத்திற்காக ரூ. 23 கோடியில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.
திருக்கோவிலுாரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 120 கோடி ரூபாயில் அணைக்கட்டு விரிவுபடுத்தி புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. வருங்காலங்களில் ஒவ்வொரு கிராமத்தின் தேவை குறிப்பாக சாலை, தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு நகரத்துக்கு இணையாக தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக திருக்கோவிலுாரை உயர்த்த பாடுபடுவேன் என கூறினார்.
மேலும்
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி