உளுந்துார்பேட்டை தி.மு.க., வேட்பாளருக்கு மாவட்ட செயலாளர் ஓட்டு சேகரிப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தவேலுக்கு எறையூர் பகுதியில் மாவட்ட செயலாளர் வசந்த் கார்த்திகேயன் ஓட்டு சேகரித்தார்.

உளுந்துார்பேட்டை தொ குதி தி.மு.க., வேட்பாளர் வசந்தவேல், எறையூர் பகுதியில் ஓட்டு சேகரித்தார். அப்போது, வேட்பாளர் வசந்தவேலை ஆதரித்து எறையூர் காரியஸ்தர்களிடம், மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் ஓட்டு சேகரித்து பேசுகையில், தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியதால் முன் மாதிரி மாநி லமாக திகழ்ந்து வருகிறது.

பல வெளிநாட்டினர் தமிழகத்தில் முதலீடு செய் வதில் ஆர்வம் காட்டியதால் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாகி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டைக்கு புதிய பஸ் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மீண்டும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி அமைத்திட வேட்பாளர் வசந்தவேலை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.

அப்போது ஒன்றிய செயலாளர்கள் ராஜாவேல், வைத்தியநாதன், ஒன்றிய துணை சேர்மன் அலெக்சாண்டர், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், நிர்வாகி வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement