கிராம மக்கள் வாழ்வில் ஏற்றம் காண தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வி.சி., வேட்பாளர் மாலதி பெருமிதம்

கள்ளக்குறிச்சி: தி.மு.க., ஆட்சியில் கிராம மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளதாக வி.சி., வேட்பாளர் மாலதி தெரிவித்து ஓட்டு சேகரித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதி வி.சி., வேட்பாளர் மாலதி, நேற்று சின்னசேலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ராயர்பாளையம், பெத்தானுார், ஈசாந்தை, நாட்டர்மங்கலம், தென்சிறுவள்ளூர், அம்மகளத்துார், உலகியநல்லுார், ஈரியூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தார். அப்போது, வேட்பாளர் மாலதிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஓட்டு சேகரிப்பின் போது வி.சி.,வேட்பாளர் மாலதி பேசியதாவது; கடந்த 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதில் கலைஞர் கனவு இல்ல திட்டம், இல்லம் தேடி கல்வி, மகளிர் உரிமை தொகை, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் மகளிருக்கு பஸ் பயணம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளது. கிராம மக்கள் வாழ்வில் ஏற்றம் காண பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனவே, மீண்டும் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய பானை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் கனகராஜ், தொகுதி பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி, அழகுவேல்,சம்பத், வி.சி., ஒன்றிய செயலாளர் சக்திவேல், தே.மு.தி.க., ஒன்றி செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement