பறக்கும் படை சோதனை ரூ.10.50 லட்சம் பறிமுதல்

சூலுார்: சாமளாபுரம் பேரூராட்சி பள்ளபாளையம் குளம் அருகே பறக்கும் படை சோதனையில், ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டசபை தேர்தல் முன்னிட்டு, சூலுார் சட்டசபை தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் மாலை, திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளபாளையம் குளம் அருகே, ஜார்ஜ் தகேயூஸ் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

இரு சக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமாரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த, 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement