தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்

157


நாமக்கல்: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் திமுக நிர்வாகி இல்லத்தின் முன் கருப்புக்கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்தும் முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தன் லிமிட்டை தாண்டி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. இன்று கொண்டு வரும் சட்டத் திருத்தத்தால், பெயரளவுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதியை அதிகரிக்கிறோம் என சொல்லி விட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு, மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரிக்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அவர், 'தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்' என அறிவித்து இருந்தார். அதன் படி, நாமக்கல் திமுக நிர்வாகி இல்லத்தின் முன் கருப்புக்கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்தும் முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். மாநிலங்களின் உரிமைகளை பறிக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கோஷம் எழுப்பினர். சென்னை மதிமுக அலுவலகம், அண்ணா அறிவாலயம், முதல்வர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கருப்புக்கொடி ஏற்ப்பட்டு உள்ளது.


@block_G@

ஓட்டு சேகரிப்பு@

@ இதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் நடைபயிற்சியின் போது மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். அவர்களிடம் அரசின் நலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். காய்கறி கடையில் வியாபாரிகளை சந்தித்து சிறிது நேரம் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுகவுக்கு ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது முதல்வருடன் கை குலுக்கியும், செல்பி புகைப்படமும் மக்கள் எடுத்துக்கொண்டனர்.block_G


@block_Y@

தீ பரவட்டும்!

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாவது: தொகுதி மறுவரையறைக்கு தமிழகமெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும். பாஜவின் ஆணவம் வீழட்டும். அன்று, தமிழகத்தில் பற்றத் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்புத் தீ டில்லியைச் சுட்டெரித்தது. டில்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது.


இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பாஜவின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.block_Y

Advertisement