ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்
சென்னை: 'தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள், குடிநீர் கட்டணத்தை, ஓசையின்றி உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன' என, புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 2022ல் நிலங்களுக்கான சொத்து வரி, 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆண்டுக்கு 6 சதவீதம், சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்து, 2024ல் அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சிகள், சொத்து வரியை உயர்த்தி வருகின்றன. இதன் அடிப்படையில், குடிநீர் கட்டணமும் உயர்த்தப்படுகிறது.
மீட்டர்
தமிழகத்தில், சென்னை தவிர்த்து, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், தமிழக குடிநீர் வடிகால் வாரிய விதிகளின்படி, வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர் அடிப்படையில் குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் மீட்டர்கள் சரியாக செயல்படவில்லை.
எனவே, சொத்து வரி மதிப்பில், 1.5 சதவீதம் என்ற அடிப்படையில், குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை மாற்ற வேண்டும் என்றால், மாநகராட்சி அல்லது நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், அதை செய்யாமல், தன்னிச்சையாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.
உதாரணமாக, சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில், மாதம், 100 ரூபாய் என்ற அடிப்படையில், காலாண்டுக்கு 300 ரூபாய் என, குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சமீபத்தில், மாதம், 150 ரூபாய் என, கட்டணம் உயர்த்தப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
'ஆன்லைன்' முறையில், குடிநீர் கட்டணம் செலுத்த சென்றவர்கள், கட்டண உயர்வை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்பே, கட்டண உயர்வு விபரம் மக்களுக்கு தெரியவந்தது.
தானியங்கி முறை
இதுகுறித்து, சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது: மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தெரியாமல், அதிகாரிகள் குடிநீர் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். தாம்பரம் மாநகராட்சியில், 100 ரூபாயாக இருந்த மாத கட்டணம், 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தோம்.
இதையடுத்து, கட்டணம் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டது. சொத்து வரி மதிப்பு அடிப்படையில் தானியங்கி முறையில், அதிகாரிகள் கட்டண உயர்வை அமல்படுத்துவது தவறு. சொத்து வரி உயர்வு முறையாக இல்லை என, புகார் கூறப்படும் நிலையில், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது, தனியார் மயத்துக்கான நடவடிக்கையாக தெரிகிறது. பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், கட்டண உயர்வு விகிதங்கள் குறித்து விபரங்களை திரட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகராட்சி, மாநகராட்சிகளில், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சில மாநகராட்சி நிர்வாகங்கள், தாங்களாக கட்டண உயர்வை அமல்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. எதன் அடிப்படையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக அணி ஆட்சிக்கு வந்தவுடன் தேனும், பாலும் ஓடுமா? லஞ்சம் இல்லாத இல்லாத ஆட்சி நடக்குமா? டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?.....
அனைத்து ஊர்களிலும் தண்ணீர் வந்து உயர்த்துகிறார்கள். ஆனால் ஆவடி மாநகராட்சியில் தண்ணீர் வராமலேயே வரி போடுகின்றனர் இதை என்னவென்று சொல்வது
வரியை உயர்த்தலாம் சந்தோசம்தான். ஆனால் முனிசிபாலிட்டியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லையே.......... அதைப்பற்றி ஏதாவது சொல்லலாம் அல்லவா? வருவாய்த் துறையில் 10 வருடங்களுக்கு மேலாக பட்டா வாங்க முடியாமல் தற்போதைய அரசியல் கட்சியைச்சேர்ந்த ஒரு நபரே தடுமாறி வருகின்றார். அதைப் பற்றி பேசலாமே........... இதையெல்லாம் விட்டுட்டு கருத்து சொல்ல வந்துவிடுகிறீர்கள் . கருத்து கந்தசாமி போல...........
அப்புறம் என்ன கூந்தலுக்கு ருவா எட்டாயிரம் கூப்பன் கொடுக்கிறானுவோ திருட்டு திராவிடணுவூ எங்களால் உழைத்து அதை வாங்க முடியாதா என்று தமிழன் கேட்டுட்டு போறானுவோ உடன் பிறப்பே...
தமிழ்நாட்டில் நகராட்சி ஊராட்சிகளில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தக்கூடாது தேர்தல் முடிந்தபின்பும் உயர்த்தக்கூடாது...
விடியல் டா மாடல் டா திருட்டு டா திராவிடம் டா காரி துப்புடா...
தண்ணீர் வரி , சொத்து வரி கரண்ட் மற்றும் பேருந்து கட்டணம் எவரையும் கேட்காமல் முப்பது சதவிகிதம் கடந்த 5 வருடம் ஏற்றப்பட்டுள்ளது . இனிமேலும் நாம் இந்த ஆட்சியை தேர்ந்து எடுத்தால் அனைவரும் பிட்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். எல்லா ஊடகங்களும் இதை பற்றி விவாதிப்பது இல்லை
எல்லோர் வீட்டிலும் சம்பளம் உயரனம் ,மகள் சம்பளம்,மகன் வருமானமும் உயரனும் ஆனால்வரி ஏற்றகூடவே கூடாது, ,சரி மின்சார வாரிய ஊழியர், corporation ஊழியர்கள் அவர்களுக்கு சம்பளமும் உயர வேண்டும் என்ன செய்ய வேண்டும்,மின்சாரம் என்ன மரத்தில் காய்க்கிறதா, மின் கட்டண உயர்வு ஏற்றாமல் எப்படி இது சாத்தியம் , இதில் 100 unit இலவசம் இதற்கு ஏற்படும் இழப்புயார் சரி செய்வது வரியை ஏற்ற கூடாது என்றால் எப்படி சாத்தியம் இந்த பேசிக் அறிவு இல்லை, எல்லாம் அரசு செய்யணும் , உழைச்சி சாப்பிட பாரு, அறிவை வளர்த்துக் கொண்டு வாழ பழகு,
என்ன உடன் பிறப்பே இப்படி நீட்டி முழக்கி கேவலம் ரூவா இரநூருக்காக முட்டு கொடுப்பதை விட இது தான் முத்து வேலு கருணாநிதி ஸ்தாலினின் திராவிட மாடல் ஆட்சி என்று முடித்து இருக்கலாமே டாஸ்மாக் தமிழனுக்கு என்ன புரியவா போகுது...
ஏத்துறதை முன்னாடியே சட்டப்படி சொல்லிட்டு ஏத்துனா என்னன்னுதான் கேக்கறோம். யாருக்கும் சொல்லாம திருட்டுத்தனமா எதுக்காக ஏத்தணும்? அப்புறம் அதுக்கு அபராதம் வேற போடறீங்க?
100 யூனிட் இலவச மின்சாரம் மக்களா கேட்டாங்க. ஓட்டுக்களை கவர திராவிடியா மாடல் கொடுத்தது. அதேபோல் மகளிர் மாதம் 1000 ரூ ஓசி பஸ் எல்லாம் எதற்காக..? ஓட்டுக்களை பிடுங்க. உன் தலைவனை கொள்ளையடித்த பணத்திலிருத்தா தருகிறார்கள்..?
இப்போ இருக்குற நிலமைக்கு யாரு ஆட்சிக்கு வந்தாலும்
ஏதும் பண்ண முடியாது
அரசியல்வாதிகள் இலவசங்களை அள்ளி வீசும் வரைக்கும் விலைவாசி ஏறிக்கொண்டே தான் இருக்கும்
அரசியல்வாதிகளுக்கும் ரௌடிகளுக்கும் ஆதரவான ஆட்சி. . உழைக்கிறவான் ஒரு வீடு வச்சிக்குனு வரியே கட்டிகினு இருக்கிறவன் நொண்டி எவனுகயெல்லாம் ஏகாரகணக்குலே வழுவங்க.மேலும்
-
மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்படுவேன் ஆத்துார் தொகுதி காங்., வேட்பாளர் பிரசாரம்
-
எம்.எல்.ஏ., 'சீட்' தருவதாக ஏமாற்றினர்: ராமதாஸ் பேரன் முகுந்தன் ஆடியோவால் பரபரப்பு
-
இரு மகள்களை கழுத்தறுத்து கொன்ற 'பாச' தந்தை கைது
-
'டிஜிட்டல் கைது' மோசடியை தடுக்க வருகிறது ஏ.ஐ., தொழில்நுட்பம்
-
'சார்தாம்' புனித யாத்திரை முறைப்படி தொடங்கியது: பிற மதத்தினருக்கு முதன்முறையாக கட்டுப்பாடு
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக மீண்டும் நோட்டீஸ்