உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
நமது நிருபர்
நியூயார்க்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மிச்செலின் நட்சத்திர சமையற்கலைஞர் விகாஸ் கன்னா, நடிகர் ரன்பீர் கபூர், யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் மற்றும் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி ஆகியோர், இந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட உலகின் 100 மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
அமெரக்காவிலிருந்து வெளிவரும் டைம் இதழ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மிகவும் செல்வாக்கு மிக்கவர்களின் 100 பேர் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பு உலகளாவிய முன்னோடிகள், தலைவர்கள் மற்றும் ஜாம்பவான்கள் முதல் கலைஞர்கள், புதுமையாளர்கள் வரை பலதரப்பட்டோரையும் உள்ளடக்கியுள்ளது.
இப்பட்டியலில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மிச்செலின் நட்சத்திர சமையற்கலைஞர் விகாஸ் கன்னா, நடிகர் ரன்பீர் கபூர், யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் மற்றும் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி, அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் லியோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, கனடா பிரதமர் மார்க் கார்னி, சீன அதிபர் ஜி ஜின்பிங், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் 2026ம் ஆண்டின் ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தின் தளபதி ரீட் வைஸ்மேன் போன்ற உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களான அலிசா லியூ, ஹிலாரி நைட் மற்றும் குளோ கிம் ஆகியோர் வீரதீரச் செயல்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர்களான கிரண் முசுனுரு மற்றும் ரெபேக்கா அஹ்ரன்ஸ்-நிக்லாஸ் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நம்ம ஊர் தலைவர் Time அட்டைப்படத்தில் வந்தாருங்க .பொன் வச்ச இடத்தில பூ வைத்தாற்போன்று.
ஏன் அறிவாளிகளை பற்றி தெரியவே தெரியாத அல்லது நடிக்கிறார்களா ? என்னை போன்ற ஆராய்ச்சி செய்பவர்கள் என்ன முட்டாள்களா.
அ முஹம்மட் வாஹித்
சயின்டிஸ்ட்
2021ல ஸ்டாலின் ஜெய்ச்சவுடன் ரஷியாவில கேட்டார்களாம் யாருடா இது தமிழ் நாட்டுல ஒரு ஸ்டாலின்னு அப்போ புரியல இந்த 5 வருஷத்திலே புரிஞ்சிகிட்டேன் பேர் மட்டும்தான் பெத்த பேரு ஆனா ஒண்ணும் இல்ல
விடியல் இல்லையா?
திரு காந்தி அவர்களுக்கே நோபல் பரிசு கொடுக்காத வெள்ளையர்கள். அவர்களுக்கு நமது பிரதமர் கண்ணுக்கு தெரியவில்லை. கனடா நாட்டின் பிரதமர் தான் அவர்களுக்கு சக்தி வாய்ந்ததவராகத் தெரிகிறார் அதுவும் இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதெயெல்லாம் செய்தியாகப்போடுவதே நாம் நம் நாட்டிற்கு செய்யும் துரோகம்.
avoid TIME survey.Omly MORNING STAR survey accepted in India !
நடிகர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களா ?? தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமில்லாத , நபர் செல்வாக்கு மிக்கவன் என்றால் , அந்த செல்வாக்கு தேவையே இல்லை ..மேலும்
-
ரூ.60 லட்சம் நிலமோசடி : உறவினர்கள் இருவர் கைது
-
மக்களுடன் நிற்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே: தி.நகர் சத்யா
-
தலையில் விழுந்த குடம்: நனைந்த தி.மு.க., நிர்வாகிகள்
-
வார்டு தோறும் மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்: தமிழிசை
-
குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடும் சூழலை ஏற்படுத்தி தருவேன்: கார்த்திக் மோகன் உறுதி
-
வாரத்தின் ஏழு நாட்களும் எம்.எல்.ஏ., ஆபீஸ் இயங்கும் :அ.தி.மு.க.,- கந்தன் உத்தரவாதம்