விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?
திருப்பூர்: திருப்பூரில், த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய 'ரோடு ஷோ' வில் திரண்ட கூட்டம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கொங்கு மண்டலம், பொதுவாக, அ.தி.மு.க.வின் கோட்டை என்ற ஒரு அடையாளம் இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு நேரடி போட்டி, தி.மு.க. தான். தேர்தல் திருவிழாவின் போது, இரு கட்சியினர் சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், வேட்பாளர் அறிமுக கூட்டம் போன்றவற்றுக்கு, சாரை சாரையாக வாகனங்களில் மக்கள் அழைத்து வரப்படுவர். அவர்களுக்கு உணவு, குடிநீர், பணம் என அனைத்தும் கட்சியின் உபயம் தான்.
இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம், அவிநாசி மற்றும் பெருமாநல்லுாருக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவிநாசி வழியாக பெருமாநல்லுார் வந்த அவருக்கு வழிநெடுகிலும் கட்சியினரும், ரசிகர்களும் கரைபுரளும் உற்சாகத்துடன் வரவேற்பு கொடுத்தனர். பெருமாநல்லுார் சந்திப்பு சாலை துவங்கி, பூலுவப்பட்டி வரை 'ரோடு ேஷா' நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பெருமாநல்லுார் சந்திப்பில் பிரசாரம் செய்த அவர், 'ரோடு ஷோ'வை ரத்து செய்து, திரும்பினார். இதனால், அந்த சாலை முழுக்க பரவியிருந்த கட்சியினரும், ரசிகர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



ஏறத்தாழ, 5 மணி நேரத்துக்கும் மேலாக, சுட்டெரிக்கும் வெயில் குழந்தைகளுடன் காத்துக்கிடந்த தொண்டர்கள் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். காலை முதலே இச்சாலை முழுக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருப்பூர் மட்டுமின்றி கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். ரோடு ேஷா ரத்து செய்யப்பட்டது, அவர்கள் மத்தியிலும் 'உழைப்பு வீணாணதே...' என்ற ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
கொங்கு மண்டலத்தில், அதுவும் நகரப்பகுதி அல்லாத பெருமாநல்லுார், அவிநாசியில் விஜயை பார்க்க திரண்ட கூட்டம், சற்றே மிரளத்தான் செய்திருக்கிறது. இந்த கூட்டத்தை, 'ரசிகர் பட்டாளம், சினிமா பிரியர்கள்' என பலரும், பலவாறு விமர்சிக்க தான் செய்கின்றனர். ''எதுக்காக விசிலுக்கு ஓட்டுப்போட போறீங்க...'' என்ற கேள்விக்கு, ''விஜய் கட்சிங்க. அவ்வளவு தான்'' என ஒற்றை வரி பதில் மட்டுமே அவர்களிடம்.
பிற கட்சியினர், காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் நிலையில், தங்களது சொந்த காசை செலவழித்து வந்து சென்றிருக்கிறது, இந்த பெருங்கூட்டம். ஒவ்வொரு கட்சியிலும், கட்சி சார்பிலேயே கட்சித்துண்டு, சின்னம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் நிலையில், இங்கு நிலைமை தலைகீழ். கட்சித்துண்டு, 50 ரூபாய், விசில், 10 ரூபாய்க்கு விற்பனை செய்தவாறு, ஏராளமானோர் வழிநெடுகிலும் நின்றிருந்தனர்; கட்சியினரும் காசு கொடுத்து அவற்றை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.
கூட்டத்தில், பிரசார வாகனம் மீது ஏறி நின்ற விஜய், நேராக வாக்குறுதிகளை வாசிக்க துவங்கினார். மாறாக, கட்சி நிர்வாகிகளின் பெயரை சொல்லி 'அவர்களே... இவர்களே' என, அரசியல் 'சம்பிரதாயத்தில்' நேரத்தை கரைக்கவில்லை. தொகுதியில் போட்டியிடும், 8 வேட்பாளர்கள் அங்கிருந்தும் வேட்பாளர்களை கூட தனித்தனியாக பெயர் சொல்லி அறிமுகம் செய்யவில்லை. 'தனது முகம், விசில் என்கிற சின்னம்' இது மட்டுமே, அவரது பிரசார ஆயுதமாக இருந்தது. வேட்பாளர்களுக்கு இது, மனதோரம் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், 'சகித்து தானே போக வேண்டும்...' என கடந்து போயினர்.
'இந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா...?' என்பதே, இப்போதைய பேசு பொருள்.
விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?
1. தமிழக முழுவதும் சராசரியாக எடுத்துக்கொண்டால், திரு. ஜோசப் விஜய் கட்சிக்கு, வீட்டுக்கு ஒரு ஓட்டு என்று விழுகின்ற நிலையில் தான் களயதார்த்தத்தில் காண முடிகிறது.
2. திரு. ஜோசப் விஜய்க்கு கூடிய கூட்டம் தானாக வந்த கூட்டம் போல தெரிகிறது. திமுக மற்றும் அதிமுகவை போல பணம் கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல என்பது களத்தில் தெளிவாக தெரிகிறது.
3. இதில் திமுகவை விட அதிமுகவிற்குத்தான் சற்று கூடுதல் ஓட்டு சதவிகித இழப்பு ஏற்படுத்தும் போல தெரிகிறது. குறிப்பாக, அதிமுகவின் கணிசமான இளம் தலைமுறை ஓட்டுகள் திரு. ஜோசப் விஜய்க்கு மாறும் போல களத்தில் தெரிகிறது.
4. இரண்டாம் இடத்திற்குத்தான் கடும் போட்டியை களத்தில் காண முடிகிறது. இதற்க்கு காரணம், அதிமுகவின் கூட்டணிக்கு ஒருங்கிணைந்து விழுகின்ற ஓட்டு நான்கு புறமும் பிரிந்து விட்டது: 1. மேற்குப் பகுதியில் திரு. பழனிசாமி அவர்கள் மற்றும் திரு. செங்கோட்டையன் அவர்கள் 2. தெற்குப் பகுதியில் திரு. பன்னீர் அவர்கள், திரு. கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் திரு. சசிகலா அவர்கள் 3. மத்தியப் பகுதியில் திரு. வைத்தியலிங்கம் அவர்கள் 4. வடக்குப் பகுதியில் திரு. ராமதாஸ் அவர்கள்.
5. பாஜகவின் சூத்திரதாரிகளின் கமிஷன் உதவி செய்யவில்லையென்றால், அதிமுகவுக்கு இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் போல கள நிலவரம் காட்டுகிறது.
6. அதிமுக என்ற ஆலமரம் வீழாமல் இருப்பது தமிழகத்துக்கு நல்லது.
ஜெய் ஹிந்து. ஜெய் பிரபஞ்சம்.
இந்த முறை திமுகவுக்கு எழுந்திருக்கமுடியாத மரண அடி காத்திருக்கு.. 234 x 0 = 0. அதோட முடிஞ் .
ஆமா.. விஜய்க்கு கூடிய அத்தனை கூட்டமும் ஓட்டாக மாறி... சுமார் 10,55, 67, 88, 605 வாக்குகள் பெற்று முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவார்...?
தீயமுக ஓட்டுகள் சிதறி ,த.வெ.க.பக்கம் சென்றால் அ.தி.மு.க வெல்ல வாய்ப்பு உள்ளது.
மாறாது. அதேபோல திமுகவினரிடம் வாங்கிய பணம், இலவசங்களும் ஓட்டாக மாறக்கூடாது.
மாறும்
All the younger generations both male and female voters to TVK major impact for DMK government and their aliance team because Tamil Nadu people wants some changes whether vijay have that capability or not his fans not been studying all the impact they like vijay they will put their vote to TVK thats all, what ever old slogan still repeated by DMK will not bothering by new generation hence the majority of the impact was only DMK, after May month 4th defenetly DMK will get the seats but it will not sufficient to sit with chief minister seat, the same thing was happening AIADMK also, this election was not that earlier election this very peculiar one tamil nadu will never seen such a situation everything will known after election results
எந்த தர்க்கத்தின் அடிப்படையில் திமுக வாக்கு மட்டும் தான் தற்குறிகளுக்கு போகும் என்று கூறுகிறீர்கள் ?? எந்த தர்க்கத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு ஒரு சேதமும் இருக்காது என்று கூறுகிறீர்கள் ?? அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு தர்க்கத்தையாவது முன்வையுங்கள் .
வாக்கு பதிவு இயந்திரம் முன்னாடி நிற்கும்போது கூட சிலர் மனம்மாறி அவர்கள் குத்த நினைத்த சின்னத்தை விட்டுவிட்டு பல்வேறு காரணங்களுக்காக வேறு சின்னத்தில் குத்திவிட்டு வருவார்கள். தற்போது குறிப்பாக பெண்கள் மனதில் பல்வேறு நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கும் கட்சி ... அந்த கட்சியினால் நேரடியாக அல்லது மறைமுகமாக பலனடைந்து இருக்கும் பெண்கள் இதுகாலம் வரை குத்திக்கொண்டிருந்த சின்னத்தை விட்டுவிட்டு அந்த நன்றியை காட்டும் விதமாக மாற்றி குத்திவிட்டு வருவதற்கும் வாய்ப்பு மிக மிக அதிகம் . வாக்குச்சாவடி அருகே பிரசாரம் செய்யக்கூடாது ...ஆனால் தற்போது ஒவ்வொருவர் கையிலும் உள்ள அலைபேசியில் 24 மணி நேரமும் பிரசாரம் ஓடிக்கொண்டிருக்கு. அன்றைய தினம் சில கட்சிகள் இணையவெளியில் வித்தியாசமான முறையில் பிரசார முன்னெடுப்புகளை மக்களை ஈர்க்கும் விதத்தில் பகிறுவார்கள். அதுவும் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் இவர்களுக்கு இன்ன காரணத்துக்காக வாக்களிக்காதீர்கள் என்ற கோணத்தில் பிரசார முன்னெடுப்பை வாக்கு பதிவு அன்று இணையதளத்தில் நிச்சயம் செய்வார்கள். அது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை கருத்தில் கொள்ளவேண்டும். தற்குறி குறித்த எதிர்மறை எண்ணங்களை பதிவேற்ற புதியதாக காரணங்களை தேடவே வேண்டாம். குறிப்பாக பெண்கள் மத்தியில் அத்தகைய எதிர்மறை எண்ணத்தை விதைக்க இப்போதே எல்லா கட்சிகளும் மாற்று ஏற்பாடுகளில் இறங்கி இருக்கும். நேர்மறை பிரசாரத்தை விட எதிர்மறை பிரசாரம் வெகு விரைவில் பரவும்.
சாவுமணி ஆ திமுகவுக்கு அல்ல ??
அதிமுகவுக்குத்தான் ??
இரண்டாமிடத்திற்கு கடும்போட்டி இருக்கும்போல
If young generation suppose elect VIJAY without knowing the political status in Tamilnadu and Centre, it would definitely affect our developments further in our state except five or six persons around Vijayமேலும்
-
அவிநாசி பிளேக் மாரியம்மன் பூச்சாட்டு விழா
-
' நான் உங்க ஊர் பொண்ணுங்க...' தி.மு.க. வேட்பாளர் 'சென்டிமென்ட்'
-
வீடுகளில் கருப்பு கொடி தி.மு.க.வினர் போராட்டம்
-
பழனியப்பா சி.பி.எஸ்.இ. பள்ளி :அவிநாசி தாலுகாவில் முதலிடம்
-
திருப்பூர் இனிதாக...
-
தேர்தல் குப்பை விவகாரத்தில் கண்காணிப்பு குழு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி