சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி
விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கம்பக்கோட்டையில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து 4 முறை பட்டாசுகள் வெடித்து சிதறியதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பவள ஒளியில் ஒளிரும் 'தினமலர்'
-
உள்நாட்டில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு
-
தகவல் சுரங்கம்
-
அறிவியல் ஆயிரம்
-
தி.மு.க., அரசை தண்டிக்க தமிழக மக்கள் தயார்!: பா.ஜ., நிர்வாகிகளிடம் மோடி உறுதி
-
நெல்லுக்கான ஊக்கத்தொகை கடித விவகாரத்தில் தாமதம் ஏன்? மூன்று மாதமாக ஸ்டாலினிடம் மறைக்கப்பட்டதா?
Advertisement
Advertisement