தி.மு.க., அரசை தண்டிக்க தமிழக மக்கள் தயார்!: பா.ஜ., நிர்வாகிகளிடம் மோடி உறுதி
சென்னை: ''தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசின் நிர்வாக அமைப்பில், ஊழல் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. அதனால், தி.மு.க.,வையும், அதன் அரசையும் தண்டிக்க, தமிழக மக்கள் தயாராக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியை, மாற்றத்திற்கான நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும், 23ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தொண்டர்களை உற்சாகப்படுத்த, பிரதமர் மோடி, 'எனது பூத் - மிக வலிமையான பூத்' நிகழ்ச்சி வாயிலாக, தமிழக பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் நேற்று மாலை, 'ஆன்லைன்' வாயிலாக கலந்துரையாடினார்.
தமிழகத்துக்கு தாராளம்
இந்நிகழ்ச்சியை, சென்னை மயிலாப்பூர் உட்பட மாநிலம் முழுதும் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.,வினர் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பல ஆண்டுகளாகவே இரவு பகல் பாராமல், மக்களுடன் இணைந்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கான பிரசார இயக்கத்தில் இணைந்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு நிர்வாகியும், 'என் பூத் மிக வலிமையான பூத்' என்ற மந்திரத்தை தாங்கி செயல்பட்டு வருகிறீர்கள். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை, தமிழக மக்கள் மாற்றத்திற்கான ஒரு நம்பிக்கையாக பார்க்கின்றனர்.
கடந்த, 2004 - 2014 வரையிலான காலக்கட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், தி.மு.க., அங்கம் வகித்தபோது கூட, தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. எத்தனையோ பிரச்னைகள் இருந்தபோதிலும், அப்போது அவற்றுக்கு தீர்வுகள் காணப்படவில்லை.
ஆனால், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின், 10 ஆண்டுகளில், இந்த சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளது. இத்திட்டப் பணிகள் மிக வேகமாக நடக்கின்றன.
ஆளும் தி.மு.க., அரசின் முறையற்ற நிர்வாகத்தால், அக்கட்சியை தண்டிக்க, தமிழக மக்கள் தயாராக இருப்பதை, நான் அறிகிறேன். தமிழகத்தில் தி.மு.க., அரசு, ஊழலை, தன் நிர்வாக அமைப்பின் ஒரு அங்கமாகவே மாற்றி விட்டது.
விவசாயிகள் பயன்
ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் மலிந்துள்ளன. பல அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊழல், கமிஷன், வசூல் ஆகியவை, தி.மு.க., அரசின் அடையாளமாகவே மாறி வருகின்றன.
விவசாயிகளின் நலனே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதன்மையான முன்னுரிமை. நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில், ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில், மருத்துவ கல்வி இடங்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, பாம்பன் பாலம் கட்டுமானம், இந்த நேர்மறையான பணிகளை பிரதிபலிக்கிறது. திட்டங்களின் பயன்கள், எந்த ஒரு இடைத்தரகரும் இன்றி, நேரடியாக விவசாயிகளை சென்று அடைவதை உறுதி செய்வதே, என் அரசின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. தமிழகத்தில், 'பி.எம்.கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டு உள்ளது. 'பசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்டு, அந்த பணமும் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., அரசின் அணுகுமுறையால், பல ஏழை குடும்பங்களால், 'பி.எம்.ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் பயன்களை பெற முடியாமல் போனது; இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தில், இத்திட்டத்திற்கு முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை; தகுதியுள்ள நபர்கள் பட்டியலில் சேர்க்கப்படவும் இல்லை.
அவ்வாறு செய்திருந்தால், தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைத்திருக்கும். தமிழகத்தில் தி.மு.க., அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படும் முறையற்ற நிர்வாகத்தை, பா.ஜ., தொண்டர்கள், மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
திட்டங்களின் பயன்கள் கிடைக்கப்பெறாத, ஆனால் இன்னும் தகுதி வாய்ந்த நபர்களை கண்டறிய வேண்டும். தமிழகத்தில், ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கிடைப்பதை, நாங்கள் உறுதி செய்வோம்; இது, மோடியின் உத்தரவாதம்.
இன்று, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. போதைப்பொருட்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனைக்கான வலைப்பின்னல் வலுவடைந்து வருகிறது. இத்தகைய சட்ட விரோத செயல்களுக்கு, தி.மு.க., அரசே பாதுகாப்பு அளித்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத நிலையிலும் கூட, நாங்கள் எவ்வளவோ திட்டங்களை செய்துள்ளோம். இதை இளம் வாக்காளர்களிடம், பா.ஜ., தொண்டர்கள் எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்தில் இரட்டை இன்ஜின் அரசு அமைந்தால், வளர்ச்சியின் வேகம் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பா.ஜ., தொண்டர்களிடம், இந்நிகழ்ச்சி வாயிலாக, பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
தி.மு.க., அரசை தண்டிக்க தமிழக மக்கள் தயார் ...... ஆமா ..... நீங்க அதிக துட்டு கொடுத்தா தமிழக மக்கள் தயார் ......
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பாரதிய ஐனதா முதல்வர் பெமா காண்டு அரசு திட்டங்களுக்கான டெண்டர் முறைகேட்டில் 1270 கோடி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது விசாரணை நடத்த கடந்த வாரம் உச்சநீதிமன்றம் சிபிஐ க்கு உத்தரவிட்டுள்ளது பற்றி மாண்புமிகு பிரதமருக்கு தெரியுமா தெரியாதா?
பிரதமர் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடினாரா? எந்த மொழியில் கலந்துரையாடினார்?
வீணா போன வேணு.இங்கு துண்டு சீட்டு இல்லாம படிக்கவே தெரியாது
வேணு இன்னொரு 200 ரூபாய் வேணு ம் என்று கருத்து தெரிவிக்கிறார்
ஊழலை வெளுக்கும் வாஷிங் மெஷின், தேர்தல் நிதி பத்திர கார்ப்பரேட் ஊழல் வசூல், கணக்குக்கு காட்டாத பிஎம் கேர்ஸ் கோடானுகோடிகள். இவைகளை பற்றி தமிழக மக்கல் கேள்வி கேட்கிறார்கள்
லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் 4300 கோடி அதிமுக பாஜக கூட்டணிக்கு கொடுத்தது பற்றி ஆரூர் சாரின் கருத்து என்ன....
ஒடிசாவில், தமிழர்களை திருடர்கள் போல சித்தரித்து பேசியது, அடிக்கடி ஞாபகம் வருகிறது..
அப்படிப் பேசவே இல்லை. ஆதாரமில்லாத புகார்..ஆனா ஏற்கனவே திருடர்கள் கையில்தான் தமிழக ஆட்சி உள்ளது
நீங்கள் என்ன சொன்னாலும் நீதிபதிகள் ஒத்துழைப்பு வேண்டுமே. ஊழலுக்கு தண்டிக்கப்பட்ட பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்து ஓராண்டாகியும் வழக்கு நகரவில்லை. எதாவது செய்ய முடிந்ததா?.அப்பீல் செய்யும் கடமையுள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அலட்சியமாக இருந்து உதவுகிறது. டேவிட்சன் ஒத்துழைப்பு அபாரம்.
அறிவியல் பூர்வமாக தேர்தல் பத்திரம் மூலம் பிஜேபி அடிச்ச கொள்ளையை உச்ச நீதிமன்றம் தடை செய்தது. அவ்வளவு யோக்கியமானவங்க இவர்களும் சொம்பு தூக்கிகளும்.
லாட்டரி மார்ட்டின் திமுக வுக்கு கொடுத்த 550 கோடி தேர்தல் பத்திரங்களில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒளிந்திருந்தது.
உருப்படியான எதையும் தமிழ்நாட்டுக்கு செய்யாத பிஜேபி எதுக்கு நமக்கு? நமக்கு பின்னால் ஆரம்பிச்ச எய்ம்ஸ் கூட கட்டி முடிச்சாச்சி. இது தமிழ்நாட்டின் மேல் உள்ள வெறுப்பு தானே. என்ன மூஞ்சிய வச்சிக்கிட்டு ஓட்டு கேட்க வர்றாங்க....
தமிழ் நாட்டை தண்டித்த பிஜேபி ஐ தண்டிக்க தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்கள்...
சீனு அப்படியே உல்டா சொல்ற