நெல்லுக்கான ஊக்கத்தொகை கடித விவகாரத்தில் தாமதம் ஏன்? மூன்று மாதமாக ஸ்டாலினிடம் மறைக்கப்பட்டதா?
- நமது நிருபர் -
நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரத்தில், மத்திய அரசு கடிதம் எழுதிய தகவலை, மூன்று மாதம் கழித்து,முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியில் அனுப்பிய கடிதம், முதல்வரிடம் மறைக்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தஞ்சாவூரில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'அதிகாரிகள் ஒரு கடிதத்தை என்னிடம் காண்பித்தனர். மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்தான் அது. தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை காரணமாக, நெல் உற்பத்தி பெருகி வருகிறதாம். அதனால், பிரச்னைகள் உருவாகிறதாம். எனவே, நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் துறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளனர்' என்றார்.
இதற்கு பதில் அளித்து, உடனடியாக நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டார். அதில், 'அனைத்து மாநிலங்களுக்கும், அந்த கடிதம் அனுப்பப்பட்டது. மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை கொள்கையை, தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகை அளிப்பது, மாநில அரசுகளின் அதிகாரம்; அதை யாரும் பறிக்கவில்லை' என, குறிப்பிட்டார்.
கடிதம் மறைக்கப்பட்டதா;
உடனே ஸ்டாலின், 'தாங்கள் சொல்வது உண்மை என்றால், அந்த கடிதத்தை வெளியிட நீங்கள் தயாரா' என கேட்டார். அதை தொடர்ந்து, நிர்மலா அந்த கடிதத்தை, வலைதளத்தில் வெளியிட்டார். அது ஜனவரி 9ம் தேதியிட்ட கடிதம். இதுவரை அது குறித்து, அரசு எதுவும் தெரிவிக்கவில்லை; முதல்வரும் கருத்து கூறவில்லை.
ஜனவரியில் வந்த கடிதத்தை, இப்போது அதிகாரிகள் தந்ததாக, முதல்வர் கூறியுள்ளார். அப்படியென்றால் மூன்று மாதங்கள், அந்த கடிதம் முதல்வருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டதா; அல்லது தேர்தலுக்காக தற்போது இப்பிரச்னையை எழுப்புகிறாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ''ஊக்க தொகையை நிறுத்த வேண்டும் என, நிதி அமைச்சக கடிதத்தில், மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை” என ஸ்டாலின் கூறினார்.
அரசியல் ஆதாயம்
அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “பருப்பு, எண்ணெய் வித்து, சிறுதானிய உற்பத்தியை பெருக்கி, சமையல் எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பதன் வாயிலாக, பொருளாதார நிலைத்தன்மையை அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, தேசிய உணவு பாதுகாப்பிற்கான பொறுப்பை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பு. பெரும்பாலான மாநில அரசுகள், இதை புரிந்து கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், ஸ்டாலின் மட்டுமே, இதை சர்ச்சையாக்கி ஆதாயம் தேட பார்க்கிறார். தி.மு.க.வை பொறுத்தவரை, இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே, அவர்களின் நோக்கம்” என கூறினார்.
இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், 'பெரும்பாலான மாநில அரசுகள், நெல்லுக்கு ஊக்கத்தொகை தர வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதாக, தாங்கள் தெரிவித்திருப்பது, உண்மைக்கு புறம்பானது. கேரள முதல்வர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடித விவகாரத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து, எந்த விளக்கமும் தரவில்லை.
@block_B@ 3 மாதம் துாங்கி விட்டு புலம்புவதா?
எண்ணெய் வித்து, பயிறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க, நெல்லுக்கான ஊக்கத்தொகையை அந்த பயிர்களுக்கு வழங்கலாம் என்ற, மத்திய அரசின் ஆலோசனையை ஏற்க வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு இல்லை. மத்திய அரசின் கடிதம், ஜனவரியில் அனுப்பப்பட்டது. இது பற்றி ராஜ்யசபாவில் மா.கம்யூ. கேள்வி எழுப்பியபோது, தி.மு.க. உறுப்பினர்கள் மவுனமாக இருந்தனர். மூன்று மாதம் துாங்கி விட்டு, இப்போது, தி.மு.க.வுக்கு எதிராக வீசும் அலையை தடுத்து விடலாம் என்ற நப்பாசையில், ஸ்டாலின் புலம்புகிறார்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.block_B
ஸ்டாலின் அரசுக்கு எதை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்ற சிந்தனைக்கே நேரம் போதவில்லை.
இதில் மத்திய அரசு கடிதத்தை படிக்க நைரமில்லை
கச்சத்தீவை விற்பது போன்ற திட்டம் மத்திய அரசிடம் இருந்தால் உடன் பரீசிலைக்கப்படும்.
இது திராவிட தேர்தல் ஸ்டண்ட்
கடிதம் கிடைத்தது. ஆனால் அது ஆங்கிலத்தில் இருந்தது. ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்கள் விடுமுறையில் இருந்ததால் 3மாத தாமதம் ஆகியிருக்லாம்.
அவருக்கு எங்க புரிய போகுது அவருக்கு போட்டோ ஷூட் செய்ய ஒத்திகை பார்க்கவே நேரம் சரியா இருக்கும் அதுவும் அவருக்கு இருக்கிற திறமைக்கு எத்தனை முறை ஒத்திகை பார்க்க வேண்டி இருக்கமோ அதுக்கே ஒரு நாளைக்கு 48மணி நேரம் தேவை படும்
ஒன்னும் புரியாது சொன்னாலும் எறாது.
தெரியாமல் சொல்லிவிட்டான் - சொல்லிட்டு திருவிழாவுல காமப்போன புள்ளைபோல முழிப்பதை பாரு
மறைக்க தேவையில்லை கண்ணுக்கு எதிரே இருந்தாலும், படித்து புரிந்து கொள்ள முடியுமா?
வெறும் நெல் சாகுபடியை மட்டுமே சார்ந்திருக்காமல் பருப்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவதன் மூலம் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் மத்திய அரசுக்கும் அவற்றின் இறக்குமதிக்கான செலவுகள் குறையும் என்ற நல்ல நோக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது தேர்தல் நேரங்களில் எப்படியெல்லாம் திரிக்கப்படுகின்றன.
ஒரு விவசாயியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட நான் நெல்லுக்கு ஊக்கத்தகையை பெற்றதில்லை. ஒரு குயின்டாலுக்கு தமிழக அரசு கொடுக்கும் 138 ரூபாய் ஊக்கத்தொகையை வாங்க வேண்டும் என்றால் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் என்னுடைய நெல்லை விற்க வேண்டும். அதற்கு மூட்டைக்கு அம்பது ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும் ஆக எனக்கு 500 ரூபாய் செலவாகும். 138 ரூபாய்க்காக 500 ரூபாய் செலவழிப்பவன் முட்டாளாக தான் இருப்பான். தனியார் வியாபாரிகள் வயலிலேயே வந்து அவர்களே முட்டை பிடித்து எடுத்துக் கொண்டு செல்கின்றனர்
விடுங்க , நேராக தெருவித்திருந்தாலும் ஒன்றும் புரிந்திருக்காது .மேலும்
-
ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது
-
தமிழக தேர்தல் காலை 11 மணி நிலவரம்; மாவட்ட வாரியாக பதிவான ஓட்டுக்கள் சதவீதம்
-
மேற்குவங்க முதற்கட்டத் தேர்தல்; 11 மணி நிலவரப்படி 41.11% ஓட்டுகள் பதிவு
-
ஆணையம் சொல்வது ஒன்று; அதிகாரிகள் செய்வது இன்னொன்று; குளறுபடியால் அம்பலமாகும் ஓட்டு!
-
கடந்த தேர்தலில் 11 மணிக்கு 27.69 சதவீதம் ஓட்டுப்பதிவு; இந்த தேர்தலில் 37.56 சதவீதம்
-
விஜயும் என்னைப்போல தான்; ஓட்டு போட்ட பிறகு அண்ணாமலை சொன்ன விஷயம்