அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள்

கள்ளக்குறிச்சி: அ.தி.மு.க.,ஆட்சி அமைந்ததும் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி நேற்று சின்னசேலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டப்பாடி, காலசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், வாசுதேவனுார், ராயப்பனுார், வி.கூட்ரோடு, மேல்நாரியப்பனுார், கனியாமூர், காரனுார், குதிரைச்சந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியின் போது மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்ல திட்ட மூலம் வீடு கட்டித்தரப்படும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 100 நாட்கள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும்.

மாதம் தோறும் 2,000 ரூபாய் உதவித் தொகை மற்றும் குடும்ப சுமையை குறைக்க 10 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.

ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., -அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement