கேபிள் டிவியில் 'ஜனநாயகன்' ஒளிபரப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி
கோவை: கோவையில் தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக பழனிசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.
தவெக தலைவர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவது தாமதம் ஆகி உள்ளது.
இதனிடையே, இந்தப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து படம் வெளியான சமூக வலைதளம் மற்றும் டெலிகிராம் சேனல்கள் உள்ளிட்டவற்றை சைபர் கிரமை் போலீசார் முடக்கி வருகின்றனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இன்று சட்டவிரோதமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக ஸ்ரீராம் கேபிள் என்ற உள்ளூர் கேபிள் டிவி சேனல் அலுவலகத்துக்கு சென்ற போலீசார், அங்கிருந்த நான்கு ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர். கேபிள் டிவி ஆபரேட்டர் பழனிசாமி, 44, என்பவர் கைது செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து (2)
Santhakumar Srinivasalu - ,
13 ஏப்,2026 - 19:50 Report Abuse
இந்த துரோகத்தால் கருமத்தபட்டி காரர்க்கு கிடைத்தது என்னவோ சிறை தானே? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
13 ஏப்,2026 - 19:21 Report Abuse
அப்ப இது TVK வேலை தான் அந்த படத்தில் விஜய் பேர் TVK தான் , படம் வாராதாதால் இப்படி செய்து இருக்கிறார்கள் ஒரு படத்தை காப்பாற்ற துப்பற்றவன் எப்படி TN காப்பாற்ற முடியும் 0
0
Reply
மேலும்
-
லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் நெருப்பில் குதிக்கிறேன்: அமைச்சர் துரைமுருகன்
-
தி.மு.க.வினர் தேர்தல் பணி மந்தம்: 'நிதி சென்று சேரவில்லை' என புகார்
-
ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்: சி.இ.ஓ.
-
பிரசாரத்தில் இணைந்த அமைச்சர்கள்
-
குண்டூசி முதல் அழியா மை வரை... வாக்குச்சாவடி பொருட்கள் வந்தன
-
தலைமையிடமாக பெருமாநல்லுார் புதிய தாலுகா உருவாக்கப்படும்: அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் வாக்குறுதி
Advertisement
Advertisement