மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் குடியிருப்பு பகுதிக்கு, மீண்டும் அரசு பஸ்களை இயக்கக்கோரி, பொதுமக்கள், துடியலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
துடியலுார் அருகே வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு '83 ஏ', '68 ஏ' என்ற இரு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. என்.ஜி.ஜி.ஒ., காலனி பாலம் கட்டுமான நடந்து வந்ததால், அந்த பஸ்கள், வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட் வழியாக கோவை சென்றன. தற்போது பாலம் கட்டுமான பணி முடிவடைந்ததால், இதுவரை இயங்கி வந்த இரண்டு அரசு பஸ்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. அதை மீண்டும் ஹவுசிங் யூனிட் வழியாக இயக்க கோரி, அரசு போக்குவரத்து அலுவலகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.
நேற்று காலை, வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட் குடியிருப்போர் சங்க தலைவர் ராஜகோபால் தலைமையில் 70க்கும் மேற்பட்டோர், துடியலுார் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர். தினமும் ஆறு முறை, இரண்டு அரசு பஸ்களையும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட் வளாகத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும்
-
சாரம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
-
தி.மு.க.,விற்கு எதிராக பிரசாரம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் பேட்டி
-
தமிழகத்தில் ஆட்சி செய்வது சபரீசன்: மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையார் பேச்சு
-
பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என தி.மு.க., பொய் பிரசாரம்: கம்பத்தில் தினகரன் பேச்சு
-
இயந்திரம் மூலம் உளுந்து அறுவடை பணி தீவிரம்
-
வள்ளியூர் ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை