தி.மு.க.,விற்கு எதிராக பிரசாரம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் பேட்டி
தேனி: விவசாயிகளுக்கு வழங்கியவாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,வை புறக்கணிக்க கோரி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.
தேனியில் நடந்த சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில்விவசாயிகளுக்கு வழங்கிய 83 வாக்குறுதிகளில்73ஐ தி.மு.க., நிறைவில்லை. போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தி.மு.க., தான். வைகை அணையை துார்வார வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் செய்யவில்லை. சட்டசபை தேர்தலில் விவசாயிகள் தி.மு.க.,வை புறக்கணிக்க வேண்டும் என தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டுள்ளோம்.
கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின்நல்ல நட்பில் உள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆதரவு என கூறி மா.கம்யூ., ஓட்டுசேகரிக்கின்றனர். அந்த கட்சி முதல்வருடன் பேசி பேபி அணையை பலப்படுத்தி, முல்லைப்பெரியாறுஅணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி இருக்கலாம். இவருடைய அரசியல் நட்பை விவசாயிகளுக்காக பயன்படுத்துவதில்லை. எனவே, தி.மு.க., புறக்கணிக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு