வள்ளியூர் ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஆசிரியை சாந்தி வீட்டில் 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வள்ளியூர் ராமலட்சுமிநகரைச் சேர்ந்த சாந்தி ஏர்வாடி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக சாந்தி அதிகாலை வீட்டை பூட்டி சென்றார். மாலை வீடு திரும்பியபோது பீரோ திறக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த 50 பவுன் நகைகளில் 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. அவர் வீட்டை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பரிசோதித்தபோது இதுவரை பார்த்திராத இரண்டு பெண்கள் வீட்டிற்குள் நுழைந்தது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து சாந்தி வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வீட்டு வேலைக்கு வந்து சென்றவர்கள், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்து சென்ற பெண்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement