தமிழகத்தில் ஆட்சி செய்வது சபரீசன்: மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையார் பேச்சு
சிவகங்கை: தமிழகத்தை ஆட்சி செய்வது ஸ்டாலின் அல்ல சபரீசன் தான் என சிவகங்கையில் மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பேசினார்.
சிவகங்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார். ஆட்சி செய்வது எல்லாம் அவரது மருமகன் சபரீசன் தான். அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.12 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் தான் காவிரி -- -- வைகை -- குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டம் அறிவித்து முதற்கட்ட நிதி ஒதுக்கினர். அதற்கு பின் வந்த தி.மு.க., அரசு இத்திட்டத்திற்கு நிதியே ஒதுக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி, விவசாயத்தை பாதுகாத்தார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் நட்புறவு கொண்டதன் மூலம் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லுாரிகள் வந்தன. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாமல், தகராறில் ஈடுபடுவார்கள். இதனால் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் கிடைக்காது.
மத்தியில் உள்ள பா.ஜ., அரசு சிறப்பு கல்வி திட்ட நிதி ரூ.2 ஆயிரம் கோடி வழங்க தயாராக உள்ளனர். ஆனால் தி.மு.க., தான் அந்த நிதியை பெறாமல் புறக்கணித்து வருகிறது என்றார்.
மேலும்
-
தமிழகத்தை சீரழித்த திமுக-காங் கூட்டணியை விரட்டியடிப்போம்: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்
-
நேற்று சரிவு; இன்று உயர்வு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு
-
அமெரிக்காவில் கஞ்சாவுடன் பிடிபட்ட ஏர் இந்தியா துணை விமானி; இந்தியாவுக்கு நாடு கடத்தல்
-
பெரம்பூரில் இன்று விஜய் பிரசாரம் ரத்து
-
என் குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்: ராமதாஸ் புகார்
-
கட்டுமான திட்டங்களுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., எப்படி கணக்கிடப்படுகிறது?