பாடகி ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம்

மும்பை : தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில், 12,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, 92, மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் அவர் காலமானார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று காலை அவரது வீட்டில் வைக்கப்பட்டது. பின், மும்பை சிவாஜி பூங்கா மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு, மஹாராஷ்டிரா அரசு சார்பில் ஆஷா போஸ்லேவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது மகன் ஆனந்த், இறுதிச்சடங்குகளை செய்த பின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு மஹா., கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement