மொபட் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

பவானி :அம்மாபேட்டை அருகே பூதப்பாடியை சேர்ந்தவர் முருகன், 65; விவசாய நிலங்களில் கூலிக்கு மருந்தடிக்கும் வேலை செய்து வந்தார். பூதப்பாடியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ராஜ். இருவரும் மொபட்டில் அம்மாபேட்டை - அந்தியூர் சாலையில் நேற்று காலையில் சென்றனர். முருகன் அமர்ந்து சென்றார்.


முகாசிப்புதுாரை சேர்ந்த கணேஷ்குமார், 20, எதிரே யமஹா ஆர்-15 பைக்கில் அதிவேகமாக வந்தார். அப்போது மொபட் மீது பைக் மோதியதில் மூவரும் சாலையில் விழுந்தனர். பலத்த காயமடைந்த கணேஷ்குமார், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மற்ற இருவரும் சிகிச்சை பெறுகின்றனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement