டூவீலர்கள் மோதல்: 6 வயது சிறுமி உட்பட மூவர் பலி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளையை சேர்ந்தவர் கபில்தேவ் முருகன் 17. இவர் வேதாளையில் அக்கா கவுசல்யா 25, வீட்டில் தங்கி கூலி வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு கவுசல்யா மகள் நபியாஸ்ரீ 6,க்கு காய்ச்சல் இருந்ததால் சிகிச்சைக்காக டுவீலரில் அக்காவுடன் கபில்தேவ் முருகன் (ஹெல்மெட் அணியவில்லை) மண்டபம் முகாம் சென்றார்.

மரைக்காயர்பட்டினத்தில் உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தபோது, வேதாளை குஞ்சார்வலசை முருகானந்தம் மகன் ரித்தீஷ் 18, (ஹெல்மெட் அணியவில்லை) டூவீலரில் சென்றார். இரு பைக்குகளும் மோதியதில் கபில்தேவ் முருகன், நவ்யாஸ்ரீ, ரித்தீஷ் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். கவுசல்யா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement