கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சூரியகாந்தி பூக்கள் அறுவடை

கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சூரியகாந்தி பூக்கள் அறுவடை பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, கீரனுார், சுக்காம்பட்டி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, போத்துரவூத்தன்பட்டி, கணக்கம்பட்டி, பாப்பகாப்பட்டி, திருமேனியூர், குளத்துார் ஆகிய பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியகாந்தி விதை நடவு செய்யப்பட்டது. தற்போது செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது.

அறுவடை செய்யப்பட்ட பூக்களில் இருந்து, விதைகள் டிராக்டர் இயந்திரம் கொண்டு பிரிக்கப்படுகிறது. தனியாக பிரித்தெடுக்கப்பட்ட விதைகள், வெயிலில் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் குறைந்த தண்ணீர் கொண்டு சாகுபடி நடப்பதால், விவசாயிகள் சூரியகாந்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விதைகள் கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி
நடந்துள்ளது.

Advertisement