சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
நமது நிருபர்
''ரீல்ஸ் பார்க்கும் குழந்தைகளை என்னிடம் அழைத்து வாருங்கள் நான் வகுப்பு எடுக்கிறேன். தேர்தல் என்பது சினிமாவில் வரும் காதல் காட்சியோ, சண்டைக் காட்சியோ கிடையாது'' என கார்த்தி எம்.பி., பேசினார்.
காரைக்குடியில் பிரசாரத்தில் கார்த்தி எம்.பி., பேசும்போது: நாம் சினிமாக்காரன் கிடையாது. அதனால் தள்ளு முள்ளு கூட்டம் கிடையாது. அரசியலில் விளம்பரம் வேண்டும். ஆனால் விளம்பரமே அரசியல் வாழ்க்கையாக இருக்கக்கூடாது. என்னுடன் எந்த பவுன்சரும் வரவில்லை. காரைக்குடிக்கு பவுன்சர் கலாசாரம் தேவையில்லை. காரைக்குடியில் எந்த அச்சுறுத்தலும் இல்லை.
காரைக்குடி மக்கள் சிம்ப்ளி சிட்டியை தான் விரும்புவர்கள். காரைக்குடிக்கு ஒரு இலக்கணம் உண்டு.காரைக்குடி அமைதியான ஊர். யார் வந்தால் அமைதியாக இருக்கும். யார் வந்தால் அராஜகம் இருக்கும் என்று சிந்திக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி யாராவது அராஜகம் செய்துள்ளார்களா. தேர்தல் என்பது சினிமாவில் வரும் பாடல் காட்சியோ, சண்டை காட்சியோ காதல் காட்சியோ கிடையாது. சினிமாவில் வரும் கற்பனை வேறு. யதார்த்த வாழ்க்கை வேறு.
ஸ்டாலின் டைட்டிலிலேயே முதலமைச்சர் ஆகவில்லை. கிளைமாக்சில் தான் முதலமைச்சராகி உள்ளார். ஸ்டாலினுக்கு அரசியல் அனுபவம் அதிகம் உண்டு. ஜெ., காலத்தில் அமைச்சராக இருந்த பழனிசாமி எப்படி முதலமைச்சரானார். கூவத்துாரில் டெண்டர் வைத்து முதலமைச்சரானார். அவரது தலைமையில் அ.தி.மு.க., சந்தித்த மூன்று தேர்தல்களிலும் தோற்றுப் போனது. முதலமைச்சராக பக்குவம் வேண்டும். எனக்கும் சினிமாவில் நடிக்க ஆசை உண்டு. எனக்கு நடிக்க தெரியுமா, வசனம் பேச தெரியுமா, ஆடத்தெரியுமா என்று கேட்கக்கூடாது. யாராவது என்னை வைத்து படம் எடுப்பார்களா.
எந்த முன் அனுபவமும் இல்லாமல், ஒருவர் படப்பிடிப்பில் இருந்து நேராக வந்து நான் தான் முதல்வர் என்று சொன்னால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா. டிரைவர் வேலைக்கு ஆள் எடுக்கும் போது கூட அனுபவம் உள்ளதா லைெசன்ஸ் உள்ளதா என்று கேட்போம். டிரைவருக்கே பல விசாரணை செய்யும் போது, முதல்வராக வரும் போது எந்த கேள்வியும் கேட்கக் கூடாதா. அவரது கூட்டத்திற்கு கூட நேரத்திற்கு வர முடியவில்லை.
அவர் சொன்னால் ரசிகர் கூட பேச்சை கேட்பதில்லை. பொது வாழ்க்கைக்கு முதலில் வாருங்கள், என்றார்.
துறந்தார் படதில் நடித்தது பாத்தது இன்னு இன்னுமா நடிக்கணும். நம்ம ஆசை செல்லா காசா ஆக்க இன்னொரு முயற்சி போல
"பணநாயகன்: என்ற தலைப்பில் ஒரு சினிமா கதை தயாராக உள்ளது.
"திருடா திருடா 2.0" என்றும் ஒரு கதை தயாராக உள்ளது.
எச் ராஜாவே முறுக்கு மீசையை வைத்து சினிமாவில் காமெடி பண்ணும் போது நாமும் காமெடி பண்ணலாமே என்று நினைத்தாரோ ?
உங்கப்பன் வித்தானே , அதற்க்கு இன்று வரை இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை , ஆனாலும் இறுமாப்போடு அலைகிறீர்கள் என்றால் அதற்க்கு காரைக்குடி மக்களின் மறக்கும் தன்மை என்று நினைத்திறீர்களா ? இல்லை உங்களின் அப்பா முதுகிலும் ஒரு குத்து குத்துவார்கள் என்பதனை மறந்தீர்களா
ஹவாலா பணப்பரிமாற்றம் பற்றி ஒரு கதை உள்ளது உதய நிதி அவர்கள் நடத்தும் பட நிறுவனம் சம்மதித்தால் உங்களை அந்தப் படத்தின் நாயகனாக நடிக்க வைப்பேன்.ஜாபஃர் சாதிக் போன்றவர்கள் துணை மற்றும் வில்லன் நடிகனாக நடிப்பார்கள்.
ஏன் ஆசை வர கூடாதா
உங்களுக்கு நல்ல கதை உள்ளது.ரெட் ஜெயண்ட் பணம் போட்டால் உங்களை வைத்து எடுக்கலாம்.ஒரு சாதாரண செல் போன் கம்பெனி நடத்தும் ஆல் இன் ஆல் அழகு ராஜாவின் கம்பெனியை காசே கொடுக்காமல் விலைக்கு வாங்குகிறீர்கள்
அவர் காசைக் கேட்டால் முட்டிக்கு முட்டி தட்டி.உள்ளே வைப்பீர்கள்.உங்கள் வீரம் பார்த்து மக்கள் உங்களை எம்.பி ஆக்கி அமைச்சராகிறீர்கள்.
திருட்டு தாத்தா , திருட்டு மகன் படத்தின் பெயர் .
தாத்தாவும் பெரிய நடிகன்
எனக்கும்தான் .....