வெம்பக்கோட்டை பிரசாரத்தில் இரு கட்சியினர் மோதல்

சாத்துார்:வெம்பக்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை கட்சியினருக்கும் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி யினருக்கும்இடையே பிரசாரத்தின் போது அடிதடி ஏற்பட்டது.

நேதாஜி சுபாஷ் சேனை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவராக மாரீஸ்வரன், 35. உள்ளார். அக்கட்சி தலைவர் மகாராஜா மற்றும் தொண்டர்களுடன் நேற்று மாலை 5:30 மணிக்கு வெம்பக்கோட்டை டீ கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக சென்ற பசும்பொன் மக்கள் தேசிய கட்சியினர் அவர்களைப் பார்த்து கோஷமிட்டுள்ளனர்.

இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு 40 போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பு மோதலில் நேதாஜி சுபாஷ் சேனை கட்சியினருடன் வந்த 17 வயது சிறுவன் சிராய்ப்பு காயம் அடைந்தார்.

மாரீஸ்வரன் போலீசில் புகார் செய்துள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement