8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்? அரசு திட்ட பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சென்னை: இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள் என கனவு இல்லம் திட்டப் பயனாளியிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அவரது அறிக்கை: இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலை பிரசாரத்தின் போது, கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன். மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
“அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன். 2026ம் ஆண்டு தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு. தமிழகம் முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது. வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம்.
ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் choice ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'. 2026 ஓட்டுப்பதிவில் "தமிழ்நாடு அணியா - டில்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழகம் அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (98)
S. Neelakanta Pillai - ,இந்தியா
15 ஏப்,2026 - 00:02 Report Abuse
மக்களின் அடிப்படைத் தேவையை அதற்குண்டான கட்டமைப்பை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவைப்படும் நிதியை மக்களிடமிருந்து வசூலித்து அதை அந்த மக்களிடமே ரூபாயாக திருப்பி செலுத்துவது என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் .அதையும் பீற்றிக்கொள்வது இருக்கிறதே ஒட்டுமொத்த கயவாளித்தனம். இதில் அரசு நிர்வாகம் எங்கே இருக்கிறது. 0
0
Reply
kjpkh - ,இந்தியா
14 ஏப்,2026 - 23:10 Report Abuse
வீட்டுக்கு ஃப்ரிட்ஜ் வந்துவிடும். எடப்பாடி கொடுக்கும் 10 ஆயிரத்தைவைத்து என்ன செலவழிக்க போகிறீர்கள். என்ன திமுக முட்டுக்களே சொல்லுங்கள். 0
0
Reply
kjpkh - ,இந்தியா
14 ஏப்,2026 - 23:08 Report Abuse
எதைக் கேட்டாலும் மத்திய அரசு நிதி தரவில்லை என்ற ஒப்பாரி. ஆனா ரூபாய் 5000 கொடுக்க தேர்தலுக்குப் பிறகு எட்டாயிரம் கொடுக்க திதி இருக்கிறது. இது யார் அப்பா வீட்டு பணம் 0
0
Reply
sasikumar - madurai,இந்தியா
14 ஏப்,2026 - 20:23 Report Abuse
10,000/- பெரிதா? 8000 கூப்பன் பெரிதா?? 0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14 ஏப்,2026 - 19:41 Report Abuse
டீஷர்ட் பதினெட்டாயிரம் ரூபாயாம். 0
0
Reply
Suresh Pandian - Madurai,இந்தியா
14 ஏப்,2026 - 19:36 Report Abuse
ஒரு வீடு, ஒரு கார், ஒரு பைக், 5 பவுனில் ஒரு செயின், 2 பவுனில் ஒரு மோதிரம், டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, கட்டில், மெத்தை, மீதம் இருக்கும் பணத்தில் வைப்பு நிதியில் டெபாசிட் செய்து வரும் மாத வருமானத்தில் குடும்ப வரவு செலவு பார்போம். 0
0
Reply
Gopal - Jakarta,இந்தியா
14 ஏப்,2026 - 19:30 Report Abuse
ஒரு எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்னு இருக்கேன் ஐயா. 0
0
Reply
Murthy - Bangalore,இந்தியா
14 ஏப்,2026 - 19:19 Report Abuse
ஸ்டாலின் அணிதிருக்கும் டீ சர்ட் விலை 18 ஆயிரம் ....அப்படி இருக்கும்போது 8000 வைத்து எதை வாங்குவது ? 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
14 ஏப்,2026 - 19:00 Report Abuse
ஊட்டியில் ஒரு டீ எஸ்டேட் வாங்கலாம் என்று நினைக்கிறேன் , மீதி பணத்தில் தினமும் ஆயிரம் ஏழைகளுக்கு மூணு வேலை சாப்பாடு . 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
14 ஏப்,2026 - 18:49 Report Abuse
ஒரு ஆடி காரும் - அஞ்சு பல்சர் பைக்கும் வேணும் சார் 0
0
Reply
மேலும் 88 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement