பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்: பாஜ தேர்தல் வாக்குறுதி
சென்னை: தமிழக பா.ஜ., தேர்தல் அறிக்கையை முன்னாள் தேசியதலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
* தைப்பூசத் திருநாள் மாநில விழாவாக அறிவிக்கப்படும்.
* மின்சார இரு சக்கர வாகனம் வாங்க தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம்.
* அதிக பக்தர்கள் வரும் கோவில்களில், தினமும் 2 மணி நேரம் உள்ளூர் மக்களுக்கு பிரத்யேக தரிசனம் ஒதுக்கப்படும்.
* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.
* சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றை தொடங்குவதற்கு ஒருமுறை நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
* தமிழகத்தில் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.
* ஆண்டுக்கு 3 விலையில்லா காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், அவை பொங்கல், தமிழ் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
* பாலியல், போக்சோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பஸ்கள் மற்றும் பல்கலைக்கழங்களில் 100 சதவீத கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மீண்டும் தீபம் ஏற்றுவதையும், அது முழுவதும் பின்பற்றுவதையும் உறுதி செய்வோம்.
* போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மரண தண்டனை; தமிழக போதைப்பொருள் ஒழிப்புத்துறை, கடலோர போதைப்பொருள் புலனாய்வு பிரிவு துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி
அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் நிதியுதவி வழங்குவோம்.
* மாவட்ட அளவில் பிரமாண்ட எஃகு சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவோம்.
* பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு,
நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம்
வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும்.
* மீனவர்களுக்கு 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாாரணத் தொகையை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், மீன்பிடி குறைநிலை காாலத்திற்கான உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்துவோம். 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காாரணமாக இஎம்ஐ செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
* 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஏஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் செயல்முறைப் பயிற்சிகளுடன் கூடிய வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
* முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ரூ.15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.
வாசகர் கருத்து (39)
J.Isaac - bangalore,இந்தியா
14 ஏப்,2026 - 21:17 Report Abuse
திமுக ஆட்சியில் டாஸ்மாக்கினால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று கூப்பாடு போட்டுவிட்டு ,இப்போது டாஸ்மாக்கை மூடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் இல்லை. 0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
14 ஏப்,2026 - 20:38 Report Abuse
இப்படி சொன்னவுடன் வோட்டு போட்டுரு வாங்களா ?? 0
0
Reply
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
14 ஏப்,2026 - 19:44 Report Abuse
பி ஜே பி தமிழ் நாட்டுக்கு நல்லதல்ல. மக்களே உஷார். 0
0
Reply
Mario - London,இந்தியா
14 ஏப்,2026 - 18:44 Report Abuse
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம் பாஜக வாக்குறுதியால் ஷாக் 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
14 ஏப்,2026 - 18:40 Report Abuse
அவியல் போல் உள்ள இந்த அறிக்கையினை தயாரிக்க ஒரு குழு அதுவும் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன் இதை வைத்துப்பார்த்தால் இது இரட்டை என்ஜின் இல்லை ஒரு ரோடு ரோலர் என்ஜின் தான். பல இடங்களில் டெபாசிட் கிடைப்பது அரிது 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
14 ஏப்,2026 - 18:40 Report Abuse
இலவசங்கள் கொடுக்கும் கட்சிகளையும் வாங்கும் பொதுமக்களையும் கண்டமேனிக்கு வசபாடிய பாஜக வளர்ப்புகள் அனைவரும் இப்ப எங்கே போனார்கள்.... 0
0
Reply
Nancy - London,இந்தியா
14 ஏப்,2026 - 18:29 Report Abuse
0
0
Reply
Nancy - London,இந்தியா
14 ஏப்,2026 - 18:26 Report Abuse
0
0
Reply
Nancy - London,இந்தியா
14 ஏப்,2026 - 18:24 Report Abuse
0
0
Reply
J.Isaac - bangalore,இந்தியா
14 ஏப்,2026 - 17:44 Report Abuse
பாஜக ஆட்சியா ? அதிமுக ஆட்சியா ? 0
0
Reply
மேலும் 29 கருத்துக்கள்...
மேலும்
-
லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் நெருப்பில் குதிக்கிறேன்: அமைச்சர் துரைமுருகன்
-
தி.மு.க.வினர் தேர்தல் பணி மந்தம்: 'நிதி சென்று சேரவில்லை' என புகார்
-
ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்: சி.இ.ஓ.
-
பிரசாரத்தில் இணைந்த அமைச்சர்கள்
-
குண்டூசி முதல் அழியா மை வரை... வாக்குச்சாவடி பொருட்கள் வந்தன
-
தலைமையிடமாக பெருமாநல்லுார் புதிய தாலுகா உருவாக்கப்படும்: அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் வாக்குறுதி
Advertisement
Advertisement