திருமாவின் இன்றைய குறி விஜய்

32

சென்னை: தினம் தினம் எதிர்க்கட்சிகளை மட்டும் குறை கூறும் வழக்கம் கொண்ட திருமாவளவன் இன்று (ஏப்ரல் 14) நிருபர்கள் சந்திப்பில், ''அதிமுக-பாஜ கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது தான் விஜயின் ஒரே நோக்கம்'' என தெரிவித்தார்.


@1brசென்னையில் நிருபர்களிடம், திருமாவளவன் கூறியதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிற என்ற நிலையில், எங்களது கூட்டணியை நேருக்கு நேர் எதிர்க்கிற கூட்டணியாக அதிமுக-பாஜ கூட்டணியை தான் பார்க்கிறோம். இருமுனைப்போட்டி தான், இந்த இரண்டு அணிகளுக்கு இடையே தான் போட்டி இங்கே நடைபெறுகிறது. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே போட்டி என்று நாங்கள் பார்க்கவில்லை.

சொந்த நிலைப்பாடு




தமிழக மக்களுக்கும் சங்பரிவார் அரசியல் பேசுகிற சக்திகளுக்கும் இடையே நடக்கிற மக்கள் யுத்தமாக இந்த தேர்தல் களத்தை நாங்கள் பார்க்கிறோம். ஒட்டுமொத்த தமிழக மக்கள் பாஜ, அதிமுக கூட்டணி செய்கிற மக்கள் விரோத அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம்.

ஆனால் விஜய் திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில், அதிமுக, பாஜ அணிக்கு சாதகமான வேலையை செய்கிறார் என்பது எங்கள் யுகம். அவர் திமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற விரும்புகிறார் என்பது அவருடைய சொந்த நிலைப்பாடு. திமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் யாரை அமர வைக்க பார்க்கிறார்.

காலூன்றுவதற்கு...



அவரே அந்த இடத்தில் அமர விரும்புகிறார் என்றால் இந்த தேர்தலில் அது சாத்தியமா என்பது அவருக்கே தெரியும். அவருக்கே வெளிச்சம். அவர் திமுக ஆட்சியை அப்புறப்படுத்தி விட்டு, அவருடைய தலைமையில் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்தும், திமுகவை வீழ்த்துவதன் மூலம் பாஜ, அதிமுக என்கிற சங்பரிவார் கைகள் தான், ஓங்கும் என்பது தெரிந்தும் அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார். பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி தமிழகத்தில் காலூன்றுவதற்கு வழி வகுப்பதாக இருக்கிறது.

ஆட்சி பீடம்




சிவப்பு கம்பளம் விரிப்பதாக இருக்கிறது. எனவே தான் விஜயின் அரசியலை காட்டுகிறோம், அம்பலப்படுத்துகிறோம். அவர் அவரால் ஆட்சிக்கு வர முடியாது, இந்த தேர்தலில் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து இருந்தும் அவர் திமுக ஆட்சியை அப்புறப்படுத்துவோம் என்று சொல்கிறார். ஆகவே அவருடைய நோக்கம் தெளிவாக தெரிகிறது.


திமுகவை அப்புறப்படுத்தி விட்டு, அதிமுக, பாஜவை ஆட்சி பீடத்தில் அமர வைப்பது தான் என் ஒரே ஆசை என்று செய்தி தமிழக மக்களுக்கு சொல்கிறார். இதை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement