வரலாறு படைத்த வாகன விற்பனை 2025 -- 26ல் 10.40 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: 'சியாம்' எனும் இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம், கடந்த நிதியாண்டு மற்றும் மார்ச் மாதத்துக்கான வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், வரலாறு காணாத அளவில் 2.83 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 - 25 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 10.40 சதவீதம் அதிகம். ஏற்றுமதி 22.70 சதவீதம் அதிகரித்து, 66.41 லட்சமாக உள்ளது.

கடந்த மார்ச் மாத பயணியர் வாகன விற்பனை, 24.70 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் 20.01 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு மார்ச்சில் மொத்த வாகனங்கள் விற்பனை, 24.94 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சைலேஷ் சந்திரா கூறுகையில், “கடந்த ஏழு நிதியாண்டுகளில் முதல் முறையாக, நிதியாண்டு வாகன விற்பனை இலக்கு முறியடிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., குறைப்பு, ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு, நுகர்வோர் ஆர்வம் அதிகரிப்பு, வருமான வரி விலக்குகள் ஆகியவை வாகன விற்பனைக்கு ஆதரவாக இருந்தன,” என்றார்.

விற்பனை நிலவரம்
Latest Tamil News

Advertisement