மீன் பிடிக்க தடை: வரத்து குறைந்தது
கோவை: தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் உற்பத்தியைப் பெருக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை தமிழக எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை செய்யப்படும்.
நேற்று முன்தினம் முதல், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. அதனால் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் மீன் மார்க்கெட்களுக்கு கடல் மீன் வரத்து இருக்காது. பிறமாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது.
கோவை மீன் மார்க்கெட்டுக்கு, கடந்த ஒரு வாரமாக கடல் மீன் வரத்து இல்லை. ஏரி, குளம் மற்றும் அணைகளில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு மாதங்களுக்கு மீன் விலை அதிகமாக இருக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்னர்.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்