கம்பன் கலை மன்றத்தில் மாதாந்திர சொற்பொழிவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் மாதாந்திர நிகழ்வு, 'தாய் மண்ணும், செந்தமிழும்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. கவிஞர் கனகராஜ் வரவேற்றார். துணை தலைவர் செல்வராசு பேசினார். மன்ற துணை தலைவர் நசீர் அகமது தலைமை வகித்து, இசையின் வாயிலாக உணர்வுகளை மிகவும் எளிதாக கலைஞர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என பேசினார்.
கோவை வின்னர் மெலோடிஸ் இசைக்குழு அமைப்பாளர் கவிஞர் திருநாவுக்கரசு, நம்நாடு, மொழி, இனம், சமுதாய நல்லிணக்கம், உறவுகள் மேம்பாடு குறித்து இனிமையான பாடல்களை பாடி தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தார்.
தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது தொகை, ஒரு லட்சம் ரூபாய், நல்லாசிரியர் விருது தொகை, 50 ஆயிரம் ரூபாய் இரண்டையும், பள்ளியில் கலையரங்கம் கட்ட வழங்கிய பெத்தநாயக்கனுார் தமிழாசிரியர் பாலமுருகனுக்கு மன்றத்தின் சார்பில், என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் பாராட்டி புத்தகம் பரிசளித்தார். மன்ற துணை செயலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் நினைவு பரிசாக நுால்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை செயலர் சிவக்குமார், இணை செயலர் பாலமுருகன், நிர்வாகிகள் காளிமுத்து, தங்க சரவணன் செய்திருந்தனர்.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்