ஜவுளித்தொழில் மேம்பட சிறப்பு பூங்கா அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
உடுமலை: ''ஜவுளித்தொழில் மேம்பட உடுமலை தொகுதியில், ஜவுளி பூங்கா அமைக்கப்படும்,'' என உடுமலை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
உடுமலை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசி ஓட்டு சேகரித்து வருகிறார்.
குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் அவர் பேசியதாவது: உடுமலை தொகுதியில் நுாற்பாலைகள் முன்பு அதிகளவு இயங்கி வந்தது. இத்தொழிலை சார்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஜவுளித்தொழில் மேம்பட உடுமலை தொகுதியில், ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இதன் வாயிலாக அத்தொழிலுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள், கட்டமைப்பு வசதிகள் மத்திய அரசு வாயிலாக இப்பகுதிக்கு கொண்டு வரப்படும்.
கிராமங்களில் வீடு இல்லாதவர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். அரசு நிலம் இல்லாத பகுதிகளில் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, தகுதியானவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
விவசாயிகளின் பிரச்னைகளை தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடர்களை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு, பயிர்க்கடன் ரத்து ஆறுதலாக இருக்கும்.
பெண்களுக்கு மாதந்தோறும், 2 ஆயிரம் ரூபாய் வழங்குவது உட்பட பல்வேறு நலத்திட்டங்கள், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அமைந்ததும், அறிக்கையில் தெரிவித்தபடி, அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பிரச்னைகள் நிலவும் பகுதிகளை கண்டறிந்து, புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
தட்டுப்பாடு இல்லாத குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பட, உடுமலை தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். பிரசாரத்தின் போது கூட்டணி கட்சியினர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்