தி.மு.க., முடக்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலை புதுப்பிக்கப்படும்! பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு
உடுமலை: ''தி.மு.க., ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும்; ஆட்சி மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராக உள்ளார்கள்,'' என பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் சண்முகவேலு, உடுமலை அ.தி.மு.க., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை, பொள்ளாச்சி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராமன் ஆகியோரை ஆதரித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியால், அனைத்து விதத்திலும் பாதித்த மக்கள், தி.மு.க., ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்; நீங்கள் ஆட்சியை விட்டு போங்கள் என ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனர்.
தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 8 ஆயிரத்து 8 படுகொலைகள்; கற்பழிப்பு வழக்குகள், 2,080; குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் 39,900 பதிவாகியுள்ளது.
பதிலடி உறுதி மத்திய அரசை எதிர்த்து, பிரதமர் மோடிக்கு கடைசி எச்சரிக்கை விடுவதாக, முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். பார்லிமென்டில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில், 39 தொகுதியிலிருந்து, 59 தொகுதியாக உயர்வதோடு, அதிகளவு பெண்கள் எம்.பி.,களாக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார்.
முதல்வர் பதவியை, மக்கள் நலன், தமிழக வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், குடும்ப வளர்ச்சிக்காக பயன்படுத்துதற்கு, வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
தேர்தல் கமிஷன், தலைமைச்செயலாளர், டி.ஜி.பி., என அனைத்து அதிகாரிகளையும் மாற்றியுள்ளது. தேர்தலில் முதல்வரையும் மக்கள் மாற்றுவார்கள்.
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்பு செய்யப்படாமல், 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், ரூ. 186 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை புதுப்பிக்கப்படும். தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை என தி.மு.க., வினர் பொய்பிரசாரம் செய்து வருகின்றனர்.
இணக்கமான அரசு தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய அலையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி, மாநிலத்தில் பழனிசாமி ஆட்சி அமையும் போது, மத்திய அரசின் திட்டங்கள் தடையின்றி கொண்டு வர முடியும்.
மத்திய அரசு பொள்ளாச்சியை தென்னை நார் ஏற்றுமதி நகரமாக அறிவித்தது. இதனால், தென்னை நார் ஏற்றுமதி, 5ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சுற்றுச்சூழலில் வெள்ளை பிரிவில் இருந்து, ஆரஞ்சு பிரிவு மாற்றி அரசாணை போட்டதால் தொழில் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு, அ.தி.மு.க., - பா.ஜ. போராடி வெள்ளை நிறத்துக்கு மாற்றினோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது.
இவ்வாறு, பேசினார் .
@block_B@
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அப்பர் அமராவதி அணைத்திட்டம் வரும் தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று செயல்படுத்தப்படும். தென்னை விவசாயத்தை மேம்படுத்த, ரூ. 350 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதனால், தென்னை விவசாயமும், அது சார்ந்த தொழிலாளர்கள் நலனும் மேம்படும். பொள்ளாச்சி நகராட்சியில் சாலைகள் படுமோசமாக உள்ளது. ஆனால், மக்களிடம் சொத்து வரி மட்டும் அதிகமாக வசூலிக்கின்றனர். பொள்ளாச்சியில் அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்காமல் இன்னும் பெயின்ட் மட்டுமே அடித்துகொண்டுள்ளனர். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, கேரள அரசுடன் பேச்சு நடத்தி குழு அமைத்தார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்துக்காக ஒரு கடிதம் கூட எழுதவில்லை. ஆட்சி அமைந்ததும், இந்த அணை திட்டம் செயல்படுத்தப்படும். பொள்ளாச்சியில் அரசு கல்லுாரி என பல்வேறு திட்டங்களை எம்.எம்.ஏ., ஜெயராமன் கொண்டு வந்தார். அவரை வெற்றி பெற வைத்தால் பொள்ளாச்சியில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும், என, அண்ணாமலை பேசினார்.block_B
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்