இடுக்கியில் வீடுகளில் பிரசவம் அதிகரிப்பு
மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் வீடுகளில் பிரசவம் அதிகரித்ததாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்தது.
இடுக்கி மாவட்டத்தில் வீடுகளில் பிரசவம் நடப்பது குறித்து தொடுபுழா வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சிங் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி சுகாதார துறையில் விண்ணப்பித்தார். அதற்கு பதிலளித்த சுகாதார துறை அறிக்கையில் மாவட்டத்தில் வீடுகளில் பிரசவம் அதிகரித்தாக தெரியவந்தது.
கடந்த ஆண்டில் 27 பிரசவங்கள் வீட்டில் நடந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தவிர 2019- -2020ல் 27, 2020 - -2021ல் 54, 2021 -2022ல் 47, 2022- -2023ல் 39, 2023-2024ல் 25, 2024-2025ல் 37 பிரசவங்கள் வீட்டில் நடந்ததாக தெரியவந்தது. மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களில் அதிகமாக வீடுகளில் பிரசவம் நடந்ததாக தெரியவந்ததால், அது போன்ற பகுதிகளில் பிரசவம் குறித்து சுகாதார துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.