மோசடிகளை தடுக்க தொலைத்தொடர்பு துறையுடன் செபி கைகோர்ப்பு

பங்கு சந்தையில் நடைபெறும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பதற்காக, செபி மற்றும் தொலைத்தொடர்பு துறை இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, தொலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்தி செய்யப்படும் நிதி மோசடிகளை தடுக்க, இரு அமைப்புகளும் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.

தொலைத்தொடர்பு துறை உருவாக்கியுள்ள ' 'டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் பிளாட்பார்ம்' தளத்தின் வாயிலாக மோசடிகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் பகிரப்பட்டு, மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.

Advertisement