தேசிய கட்சிகளுக்கு தமிழகம் பொருட்டில்லையா?
பத்ரி சேஷாத்ரி, எழுத்தாளர்
bseshadri@gmail.com
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தி.மு.க.,விற்கு அடுத்து காங்கிரசுக்கு தான் அதிக இடங்கள். ஆனால், காங்கிரசின் பிரசாரம் உங்கள் கண்களில் இதுவரை பட்டுள்ளதா?
பக்கத்திலேயே உள்ள புதுச்சேரிக்கு, ராகுல் வந்திருந்தார். ஆனால், தமிழகத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதே நாளில் புதுச்சேரி சென்றிருந்த ஸ்டாலினையும் பார்க்கவில்லை. கேரளத்துக்கும் ராகுல் சென்றார். விமானம் ஏற தமிழகத்துக்கு வந்தவர் இங்கே பிரசாரம் செய்யவில்லை. பிரியங்காவும் ராகுலை பின்பற்றினார். சோனியாவின் உடல்நலம் சரியில்லை என்பதால் அவர் எங்குமே செல்லவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் தமிழகத்துக்குப் பிரசாரம் செய்ய வரவில்லை. கூட்டணியை ஏற்படுத்த பலமுறை வந்து சென்ற கிரீஷ் ஷோடங்கர், கே.சி.வேணுகோபால் போன்ற யாரும், இதுவரை பிரசாரம் செய்ய வரவில்லை. கர்நாடகத்தின் துணை முதல்வர் சிவகுமார் மட்டும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட தமிழகம் வந்தார்.
உள்ளூர்க்காரரான ப.சிதம்பரம், கூட்டணிக்காக ஸ்டாலினை நேரில் சந்தித்தார். ஆனால், பெரும் பிரசார கூட்டம் எதிலும் அவரை இதுவரை பார்க்க முடியவில்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சி, தாங்கள் நிற்கும் தொகுதிகளில் கூட பெருங்கூட்டம் எதையும் இதுவரையில் ஏற்பாடு செய்யவில்லை.
மாறாக, தி.மு.க., கூட்டணியின் மற்ற தலைவர்களான தே.மு.தி.க., - பிரேமலதா, வி.சி.க., - திருமாவளவன், ஏன்... வைகோ முதற்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் களத்தில் மிகக் கடுமையாக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், காங்கிரஸ்காரர்கள் எங்கே போனார்கள்? தமிழகத்தை அம்பேல் என்று விட்டுவிட்டனரா? அப்படியென்றால், எதற்காக அவ்வளவு போராடி எப்படியாவது கூடுதல் தொகுதிகளை பெற்றே தீருவோம் என்று சண்டை போட்டனர்? தொகுதிகளை பெறும் முன் தொடர்ந்து சீண்டிக்கொண்டிருந்த பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர்?
சரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.,வின் நிலை என்ன என்று பார்ப்போம். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ஜ., -27 தொகுதிகளை பெற்று, அணியில் அதிக இடங்களை பெற்ற இரண்டாவது கட்சியாக உள்ளது.
பிரதமர் மோடி, ஜனவரி முதல் மூன்று முறை தமிழகம் வந்துவிட்டு போய்விட்டார். நேற்று நாகர்கோவில் வந்தார். அமித் ஷா ஒரு புதிர். தேர்தல் கூட்டணிக்காக தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர், திடீரென மேற்கு வங்கம் தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டார். 
தமிழகத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமையாக மேற்கு வங்கத்திலேயே முகாமிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் நட்டா, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட தமிழகம் வந்தார். கட்சியின் புதிய தலைவர் நிதின் நபின் தமிழகத்திற்கு வந்தால், அவர் யாரென்றே இங்கு யாருக்கும் தெரியாது. பீயூஷ் கோயல் வேலை, கூட்டணி தொகுதி பங்கீட்டோடு முடிந்துவிட்டது.
பா.ஜ.,வுக்கு ஒரு துருப்பு சீட்டு அண்ணாமலை. அவர் ஊர் ஊராக போய், அ.தி.மு.க., பழனிசாமிக்கு இணையாக பிரசாரம் செய்கிறார். ஆனால், காங்கிரசுக்கு ஒருபோதும் சளைத்ததல்ல என்பது போல பா.ஜ., நடந்துகொள்கிறது. எந்த தேவையுமே இல்லாமல், தமிழக தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு என சிறப்பு லோக்சபா அமர்வை கூட்டுகின்றனர்.
சரி, அப்படி செய்தால் தமிழகத்தில் ஜெயிக்கலாம் என்றால், அறம் முறம் என்று பேசாமல், கட்சிக்கும் கூட்டணிக்குமாவது ஏதேனும் லாபம் கிடைக்கிறதே என்று சந்தோஷப்படலாம். ஆனால் யாருடைய அறிவுரையை கேட்டனரோ தெரியவில்லை, தொகுதி மறுவரையறைக்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை களத்தில் இறக்குகின்றனர்.
இங்கே, பிரசாரத்தில் பலத்த அடிவாங்கிக் கொண்டிருந்த தி.மு.க., படாரென்று எழுந்து நிற்கிறது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகம் பாதிக்கப்படும் என்ற பிரசாரத்தை தி.மு.க., கூட்டணி கையில் எடுத்துவிட்டது. என்ன நடக்கப்போகிறது என்ற தெளிவு இல்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் உண்மை முக்கியமல்ல. பிரசாரம் தான் முக்கியம். பழனிசாமியும் அண்ணாமலையும் தெருத்தெருவாக போய் சாதித்துக் கொண்டு வந்ததை, இந்த தொகுதி மறுவரையறை மசோதா ஒரே அடியில் ஒழித்துக் கட்டிவிடக்கூடும்.
பா.ஜ.,வின் திட்டம் தான் என்ன? தமிழக தேர்தல் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று நினைக்கின்றனரா? என்ன செய்வதாக இருந்தாலும், 10 நாள் கழித்து செய்தால் குடிமுழுகிப் போய்விடுமா என்ன?
தமிழகம் உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுக்கும் மாநிலம். தி.மு.க., தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒருசேர முழங்க ஆரம்பித்துவிட்டன. த.வெ.க., விஜயும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்.
ஒரு கட்சி, ஒன்றுமே செய்யாமல் தன் வாய்ப்புகளை கெடுத்துக்கொள்கிறது. இன்னொரு கட்சி, தேவையில்லாத பல செயல்களை செய்து தன் வாய்ப்புகளை கெடுத்துக்கொள்ளப் பார்க்கிறது.
ஆக, இருவருக்குமே தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது!
எப்படி பிறக்கும் மாற்றி மாற்றி திருட்டு திராவிட கட்சி களுக்குஎன அடிமை சாசனம் எழுதி கொடுக்கும் மக்கள் இருக்கையில்.
உலகம் பூரா புரட்சி என்கிற சொல்லும் அதற்குரிய செயல்களும் கவைக்கு உதவாதவை என்று தெளிவாகிவிட்டது. மணிப்பூர், மணிப்பூர் என்று எதற்கெடுத்தாலும் கூப்பாடு போடும் , இடதுசாரிகள், கம்யூனிசம் செத்து ரஷ்யாவிலும், சீனாவிலும் யாருக்கும் கண்ணில் படாதவாறு புதைக்கப்பட்டுவிட்டது. என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மணிப்பூரில் வந்தேறி மதத்தவர்கள் காங்கிரஸின் உதவியால் வளமாக வாழ்பவர்கள், மலைவாழ் மக்களை வசப்படுத்தி நினைத்தபோதெல்லாம் ஆட்டுவிக்கின்றனர். அச்சமயம் அப்பாவி மக்கள் பலியாகின்றனர். இந்தியாவில் இருப்பது காசுதரும் கட்சியுடன் கூட்டணிக்காக கம்யூனிஸ்ட் பெயரில் உயிர் வாழும் அமைப்புகள் தாம். அவை ஒருபோதும் மக்களுக்கு நன்மை செய்ததில்லை. ஒரு சிறிய SUGGESTION. கம்யூக்களுக்கு- இன்றைய தேதியில் தொழிலதிபர்கள், தேவை இருக்கோ இல்லையோ, அவர்களது . கம்பெனிகளில்
செயற்கை நுண்ணறிவு A.I. செயல் படுத்தப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்து வருகின்றனர். அதை எதிர்த்து போராடி நிலைமையை சரிசெய்யுங்கள் பார்ப்போம்
கட்டுரை எழுதியவரின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இந்த தமிழ் நாட்டு மக்கள் பெரும்பாலானோர் எந்த உண்மையான லாஜிக்கும், புரிதலும் இல்லாதவர்கள் என்பது எனது கருத்து . உயிரைக் கொடுத்து பட்டி தொட்டி எங்கும் நடந்தே சென்று மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு, பத்திரிகையாளர் என்ற பெயரில் திராவிட விடியல் சம்பளக்காரர்கள் உட்பட அனைவர் கேட்ட சிக்கல்& நக்கல் கேள்விகளுக்கு தரமான பதில்களை ஆணித்தரமாக கூறி நல்லவர்களின் மனங்களை வென்ற திரு அண்ணாமலை அவர்களை கோவை மாவட்ட வாக்காளர்களான முதலாளிகள், ஜெயிலில் இருந்த மனிதனின் கட்டளைக்கேற்ப. தங்கள் சுயநலத்துக்காக
படு துரோகமாக தோற்கடித்ததை பாஜகவின் தலைவர்கள் மறக்கவில்லை என்பதுதான் உண்மை இதே நிலைதான் தமிழகத்தில் இன்றும் உள்ளது..... பின் எப்படி ஜோசப் விஜய் என்பவரை வெறித்தனமாக துரத்திச் செல்வதும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவதும் முன்பின் எந்த அனுபவம் இல்லாத அவரின் பேச்சுக்கு பதல் தருவதும், எந்த லாஜிக்கிற்கும் பொருந்தாத நிகழ்வுகளாகவே உள்ளன. இதையெல்லாம் பார்த்த தேசிய கட்சிகள்
புரிதல் இல்லாத மக்களிடம் மல்லுக்கட்டுவதற்கு யோசிப்பதில் என்ன தவறு ???
திமுக என்ற சாகப்போகும் கட்சிக்கு பிஜேபி பாலை வார்த்து உயிர் கொடுத்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் உழைப்புக்கு அர்த்தம் இல்லாம செய்துவிட்டனர். அப்படி என்ன அவசரமா தொகுதி வரைமுறை சட்டம் கொண்டுவரனும்.? பிஜேபி திமுகவுக்கு மறைமுகமா ஆதரவு கொடுக்காதோ என்ற சந்தேகம் இருக்கு.
இந்த தடவை நடைபெறும் தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பது என்று தெரியாமல் மிகவும் குழப்பமான மனநிலையில் தான் தமிழக மக்கள் உள்ளனரோ என்று தோன்றுகிறது.ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு கட்சியிலும் ஒற்றுமை இல்லை.கழக ஆட்சிக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியும் தோன்றவில்லை.ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தோற்றமளிக்கின்றன.யாய் யாருடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்ளு பலருக்கும் தெரியவில்லை.பாஜகவில் அண்ணாமலை மட்டுமே எதிர் கட்சிகளை பற்றி மக்களுக்கு புரியும்படி பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.எல்லோரையும் விட்டு விட்டு பேசாமல் விவசாயத்தை கவனிக்க சென்று விடலாமா என்று தோன்றுகிறது.
கட்டுரை உண்மையைப் பிரதிபலிக்கிறது .......
சென்ற பொதுதேர்தலின் போதும் முத்தலாக் சட்டத்தை கோண்டு வந்து தீமுகாவை செயிக்கவைத்தார்கள் இந்த புத்திசாலிகள். எடப்பாடியார் சென்ற ஒரு வரட கடுமைய்ன உழைப்பினை சிதைக்கின்றானர் இந்த வேக்காடுகள்.
மக்களில் மெஜாரிட்டி பேர் குடி, கஞ்சா போதை, இலவச விரும்பிகள் என்ற நிலையில் இவர்களை நம்பி பிரசாரத்தில் நேரத்தை வீணாக்குவது தேவையற்றது. மற்ற 4 மாநில பிரசாரத்தில் கவனம் செலுத்தலாம்.
மாநில உரிமைகளை நிலைநாட்டும் கழகம் என பாடப்புத்தகங்கள் வரை ஊடுருவி 58 ஆண்டுகளாக மக்களை மூளைச் சலவை செய்துள்ளனர். ஃபெடரல் அமைப்பு, மாநில உரிமை என்ற கவைக்குதவாத வாதத்தைக்காட்டி சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் இவர்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளன. பிரிவினைவாதிகள் நாட்டுக்கு எவ்வளவு ஆபத்தை விளைவிக்கிறது ? அரசியல் சட்டத்தைவிட நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்பதை நீதித்துறை எண்ணிப் பார்க்கட்டும்.
எவ்வளவு கொள்ளை அடித்தாலும் கொலை கொள்ளை கஞ்சா என்று இருந்தாலும் இலவசத்துக்கு ஓட்டு போடும் உணர்ச்சி மிக்க மூடர் கூடம் இருக்கும் வரைக்கும் இங்கு நல்லவன் வர வாய்ப்பு இல்லை. இப்போ தமிழகம் முன்னேறியதற்கு காரணம் காமராசர் மற்றும் தேசிய நீரோட்டத்துடன் இருந்த ஆட்சி காரணம். இன்னும் ஒரு 10 வருடம் மாடல் ஆட்சி இருந்தால் இந்த உலகத்துக்கே நாம தான் மாடல். நமது குழந்தை கள் வடக்கன் பாணி பூரி காரனிடம் வேலை செய்யலாம். மாடல் காரன் கொள்ளை அடித்து சொகுசா வாழ நமது பிள்ளைகள் கொடி பிடித்து கோசம் போடும் வேலை கிடைக்கும். சரி சென்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யாருக்கு ஓட்டு போட்டனர். உணர்ச்சி பிளாம்பாக தமிழனை கொன்று அழித்த மற்றும் அதற்கு உதவிய இண்டி எனும் நொண்டி கூட்டணிக்கு தானே. ஒரு பழமொழி உண்டு. உனக்கு என்ன தகுதி உள்ளதோ அதுவே வாயக்கும். கர்மவீரர் காமராஜர் ஐ தோற்காடுத்த இவர்கள் இன்னும் திருந்த வில்லை.மேலும்
-
வானைத் தொடும் பக்தி
-
காங்., ராகுல் மீதான இரட்டை குடியுரிமை புகார்: முந்தைய உத்தரவை திடீரென நிறுத்தியது ஐகோர்ட்
-
மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியே தீருவோம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி
-
கேரளாவில் 'அரிஷ்டம்' அருந்திய பழங்குடியின இளைஞர் மரணம்
-
டில்லி, பஞ்சாபில் அதிரடி: கஞ்சா, ஹெராயின் பறிமுதல்
-
பா.ஜ.,வினரை கொல்ல முயன்ற 10 மா.கம்யூ., நிர்வாகிகளுக்கு 25 ஆண்டு சிறை தண்டைனை