இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் தெற்கு கடற்கரையில் 10 அடி நீளமுள்ள கடல் பசு இறந்து கரை ஒதுங்கியது.

மண்டபம் வனத்துறை அலுவலர் ஜினோ பிளஸ்சில், வனத்துறையினர் கடல் பசுவை ஆய்வு செய்தனர்.

40 வயது உடைய இந்த கடல் பசு, 500 கிலோ எடை கொண்டது. இது வயது முதிர்ச்சியால் பாறை மீது மோதி அல்லது மீன்பிடி படகில் சிக்கி உயிரிழந்திருக்க கூடும்.

கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின் வனத்துறையினர் கடலோரம் குழிதோண்டி கடல் பசுவின் உடலை புதைத்தனர்.



Advertisement