உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளர் சுந்தருக்கு, அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுந்தர் நேற்று வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து, கிதிரிப்பேட்டை, புத்தகரம், திருவங்கரணை, தென்னேரி, வாரணவாசி, தேவரியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொண்டு நத்தாநல்லுாரில் நிறைவு செய்தார்.

சின்னிவாக்கம், கட்டவாக்கம், நாய்க்கன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது, தி.மு.க., அரசின் 5 ஆண்டு நலத்திட்டங்கள் குறித்து சுந்தர் பேசியதாவது:

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து இல்லதரசிகளுக்கும் 8,000 ரூபாய் கூப்பன் வழங்கி, அதில் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி பயன் பெறலாம்.

மேலும், கிராம வளர்ச்சிக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிறைவேற செய்ய உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வலம், வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர் மற்றும் கூ்டடணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement