தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தி.மு.க., வேட்பாளர் நித்யா சுகுமார், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், தி.மு.க., ஆட்சியின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி கூறி, கூட்டணி கட்சியினருடன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் நித்யா சுகுமார், கூட்டணி கட்சியினருடன் தொகுதி முழுதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், கட்சி சார்பற்ற பெண்கள், தி.மு.க., வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு, உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நேற்று, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட விப்பேடு, நரப்பாக்கம், மேல்கதிர்பூர், திருப்பருத்திகுன்றம், புத்தேரி, ஆரியபெரும்பாக்கம், சிறுணை பெருகல், முட்டவாக்கம், ஒழுக்கோல்பட்டு கூரம், திம்மசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில், கூட்டணி கட்சி பிரமுர்களுடன் தீவிர பிரசாரம் செய்தார்.

இதில், கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியின் சாதனைகளான முதல்வரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், உலகம் உங்கள் கையில் திட்டம், விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கி கூறி, இத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு கூட்டணி கட்சியினருடன் பிரசாரம் செய்தார்.,

Advertisement