ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி; கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.

உளுந்துார்பேட்டை தனியார் பள்ளியில் 1,800 பேர், அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,680 பேர், சங்கராபுரம் தனியார் பள்ளியில் 1632 பேர், நீலமங்கலம் தனியார் பள்ளியில் 1,776 பேர் என மொத்தம் 6,888 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய கடமைகள், பணிகள், பொறுப்புகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளும் விதம் மற்றும் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் ஆய்வு செய்தார். ஆய்வின்போது எஸ்.பி., அரவிந்த், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முருகன், சுமதி, சிராஜூதின், செந்தில்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement