கே.எம்.சி.எச்., மருத்துவமனை  தலைவருக்கு கவுரவ விருது

கோவை: கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமியின் தலைமைப்பண்பை பாராட்டி, 'சி.ஏ.எச்.ஓ., மெடாலியன் ஆப் ஹானர்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு (CAHO) சார்பில், தெற்காசியாவில் முதன்முறையாக, 10வது சர்வதேச மாநாடு, சென்னை ராடிசன் ப்ளூ ஓட்டலில் நடந்தது. இதில் 2,500க்கும் மேற்பட்ட சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

இதன் தொடக்க விழாவில், மருத்துவ துறையில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமிக்கு, 'சி.ஏ.எச்.ஓ., மெடாலியன் ஆப் ஹானர்' என்ற கவுரவ விருது வழங்கப்பட்டது.

மருத்துவ துறையில் தொலைநோக்கு பார்வையுடன், நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், அர்பணிப்பு மிக்க செயல்பாடு, நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்தல், பாதுகாப்பான மருத்துவ சூழலை உருவாக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement