சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
குள்ளஞ்சாவடி: சரக்கு வாகனம் மோதி காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 70; இவர் கடந்த, 13ம் தேதி, கோ.சத்திரம்-பழையூர் அரசுப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அதே வழியாக பின்புறமாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று, முதியவர் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த முதியவர் கந்தசாமி, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முதியவர் கந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்
Advertisement
Advertisement