போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியுடன் தகராறு :வி.சி., கட்சியினர் 5 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி: போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியை காட்டி தகராறில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குள்ளஞ்சாவடி நான்கு முனை சந்திப்பு அருகே, குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று முன்தினம் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, அவரது படத்திற்கு வி.சி., கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது அங்கு இருந்த கட்சியின் மாநில தொண்டர் அணி செயலாளர் ஜெயக்குமார், 50, ஒன்றிய துணை செயலாளர் அமிர்தராஜ் (எ) இடிமுரசு, 37, ஆகிய இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அதில் ஒருவரை ஒருவர் கீழே தள்ளி விட்டு, கத்தியை காட்டி மிரட்டி, தகராறில் ஈடுபட்டனர். தகராறு குறித்து இருதரப்பும் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தனர்.
இரு தரப்பை சேர்ந்த ஜெயக்குமார், தமிழ் ஜெயக்குமார், ராபர்ட், அமிர்தராஜ், ஆனந்தராஜ் ஆகிய, 5 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்தனர். பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக வி.சி.,யினர் இடையே மோதல் ஏற்பட்டதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர். தகராறு நடந்த போது போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் பிரசார பாதுகாப்பிற்கு சென்றதாக குள்ளஞ்சாவடி போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்